பெரம்பலூர், குன்னம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
2 Apr 2026, 3:50 pm
<p><strong>பெரம்பலூர், குன்னம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்</strong></p>
<p>பெரம்பலூர், ஏப். 2- பெரம்பலூர் மாவட்டத்தில், திமுக.வின் குன்னம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ச.த. ஜெயலெட்சுமி ஆகியோர் அறிமுக கூட்டம் வியாழக்கிழமை கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. நகரக் கழகச் செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் கழக துணைப் பொதுச்செயலாளர் எம்.பி ஆ. ராசா சட்டமன்ற வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து உரையாற்றினார். அப்போது, “பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்றங்களிலும் நமது வேட்பாளர்கள், ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் இணைந்து இந்த தேர்தலில் தீவிரமாக பணியாற்ற வேண்டும்’’ எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், த.தீ.ஒ.மு. மாவட்டத் தலைவர் கருணாநிதி, விவசாய சங்க மாவட்டத் தலைவர், கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, டாக்டர் கருணாகரன், கலையரசி, அகஸ்டின், ஒன்றியச் செயலாளர்கள் பெரம்பலூர் பெரியசாமி, ஆலத்தூர் பாஸ்கரன், வேப்பந்தட்டை சக்திவேல் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
