திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர் செல்லகுமார் அறிமுகக் கூட்டம்
9 Apr 2026, 5:30 am

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர் செல்லகுமார் அறிமுகக் கூட்டம்

கிருஷ்ணகிரி, ஏப்.8- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திமுக மாவட்ட செயலாளர் தே.மதியழகன் தலைமை தாங்கினார். முன்னாள் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் தலைமைக்குழு உறுப்பினருமான செல்லகுமார் கூட்டணி கட்சிகள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

திமுக, காங்கிரஸ், விசிக, மதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.