தொழில்நுட்ப கதிர்
13 Mar 2026, 4:52 pm

கிளாட் ஏஐ-இல் புதிய அம்சம் அறிமுகம்

ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் கிளாட் ஏஐ (Claude AI) சாட்பாட்-இல் வரைபடங்களை உருவாக்கும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டில் பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, ஊடாடும் வரைபடங்கள் (Interactive charts), வரைகட்டங்கள் (Graphs) மற்றும் விளக்கப்படங்கள் (Diagrams) போன்ற காட்சி விளக்கங்களை நேரடியாக சாட்-இல் உருவாக்கும் திறன் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிக்கலான தகவல்கள் அல்லது தரவுகளை காட்சி வடிவில் எளிதாக புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, பொருளாதார தரவு, அறிவியல் விளக்கங்கள், கல்வி தொடர்பான கணக்குகள் போன்றவற்றை கிளாட் ஏஐ-யின் உதவியுடன் வரைபடம் அல்லது விளக்கப்படமாக மாற்றிக்கொள்ளலாம். மேலும், பயனரின் தொடர் கேள்விகள் மூலம், கிளாட் ஏஐ உருவாக்கிய வரைபடங்களை மாற்றவும், புதுப்பிக்கவும் முடியும். இதனால் தரவு பகுப்பாய்வு மற்றும் விளக்கங்கள் இன்னும் தெளிவாக கிடைக்கும்.

கூகுள் குரோமில் ஜெமினி ஏஐ வசதி இந்தியாவில் அறிமுகம்

நீண்ட நாட்களாக எதிர்பார்க்க ப்பட்ட ஜெமினி ஏஐ வசதியை கூகுள் குரோமில் இணைத்து இந்திய பயனர்களுக்காக கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் தனது மேம்பட்ட ஜெமினி 3 ஏஐ மாடலை குரோம் பிரவு சரில் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய மேம்பாட்டின் மூலம் பய னர்கள் குரோமில் தகவல்களை தேடும் போது ஏஐ உதவியுடன் உடனடி விளக்கங்கள், உரைகளின் சுருக்கம், தகவல்களின் ஒப்பிட்டு கள், கூட்டங்கள் மற்றும் அட்ட வணைகளை திட்டமிடுதல் உள்ளிட்ட சேவைகளை பெற முடியும். தனியாக வேறு இணையதளம் திறக்காமல் நேரடியாக குரோம் பிரவுசரின் மேல் பகுதியில் இருக்கும் ஜெமினி ஐகானை கிளிக் செய்து ஏஐ-யுடன் உரையாடல் மேற்கொள்ளலாம். இதனோடு, தமிழ், மலையா ளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மொழி களில் ஏஐ-யுடன் உரையாடல்கள் மேற்கொள்ளும் வசதியும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சங்கள் முதற்கட்ட மாக விண்டோஸ், மேக் மற்றும் குரோம்புக் போன்ற டெஸ்க்டாப் சாதனங்களிலும், ஐஓஎஸ் சாத னங்களிலும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

பெற்றோர் நிர்வகிக்கும் வாட்ஸ் அப் கணக்குகள் அறிமுகம்!

வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெற்றோர் நிர்வகிக்கும் வாட்ஸ் அப் கணக்குகளை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்த குறைந்தபட்ச வயது 13 ஆக இருந்த நிலையில், தற்போது 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் பாதுகாப்பாக வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் வகையில் இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இதில், குழந்தைகளுக்கான வாட்ஸ் அப் கணக்கை பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் உருவாக்கி நிர்வகிக்க முடியும். குழந்தை யாருடன் பேசலாம், எந்தக் குழுக்களில் சேரலாம் என்பதையும் பெற்றோர் கட்டுப்படுத்த முடியும். தெரியாத நபர்களிடமிருந்து வரும் மெசேஜ் கோரிக்கைகளை (Message Request) பெற்றோர்கள் பரிசீலிக்கலாம். இந்த பெற்றோர் நிர்வகிக்கும் அமைப்புகள் அனைத்தும் Parent PIN மூலம் பாதுகாக்கப்படும். தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை பெற்றோர் மட்டுமே பாதுகாப்பு PIN-ஐ உள்ளிட்ட மாற்ற முடியும். இந்த அம்சம் உலகளவில் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.