தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தனியாருக்கு கொடுக்கும் பணிகளை அரசே எடுத்து நடத்த வலியுறுத்தல் வாரிய தலைவர் பேட்டி

20 Feb 2026, 2:39 pm
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தனியாருக்கு கொடுக்கும் பணிகளை  அரசே எடுத்து நடத்த வலியுறுத்தல் வாரிய தலைவர் பேட்டி
<p><strong>மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தனியாருக்கு கொடுக்கும் பணிகளை &nbsp;அரசே எடுத்து நடத்த வலியுறுத்தல் வாரிய தலைவர் பேட்டி</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, பிப்.20- &nbsp;திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளியன்று நடைபெற்றது. &nbsp;நிகழ்விற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, &nbsp;பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். &nbsp;தொடர்ந்து சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு விருது மற்றும் நலவாரிய அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், மாநகராட்சி உதவி ஆணையர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி கூறுகையில், &ldquo;திருச்சி மாவட்டத்தில், 5,200 தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் வழங்கப்பட உள்ளது. ரூ.5.5 லட்சம் மதிப்பிலான விபத்து உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. &nbsp;மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தனியாருக்கு கொடுக்கும் பணிகளை மாற்றி அரசே எடுத்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரிடம் முன் வைத்துள்ளோம்&rsquo;&rsquo; என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.