முந்தய பக்கம்

வேளாண் பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினம்: ஆளுநர் பங்கேற்பு

yesterday
வேளாண் பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினம்: ஆளுநர் பங்கேற்பு
<p><strong>வேளாண் பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினம்: ஆளுநர் பங்கேற்பு</strong></p><p>கோவை, ஜூன் 21- கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தில் ஞாயிறன்று நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வில், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந் திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டார். இந்த பிரம்மாண்ட யோகா நிகழ்வில் பல்கலைக்கழ கத்தை சேர்ந்த 1,500 மாணவர்களும், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்க ளும் ஆர்வத்துடன் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர். யோகா பயிற்சிகள் நிறைவடைந்த பின் னர், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வித மாக பல்கலைக்கழக வளாகத்தில் ஆளுநர் ‘மகிழம்பூ’ மரக்கன்றினை நட்டு வைத்தார். மரம் நடும் நிகழ்வைத் தொடர்ந்து, மாணவர்களிடையே நேரடி யாகச் சென்று கலந்துரையாடிய அவர், மாணவ, மாணவிகளுக்கு நல்வழி காட்டும் வகையிலும், அவர்களின் எதிர்கால கல்வியை சிறப்பிக்கவும் ஊக்கமளித்து உரையாடினார். இந்நிகழ்வில், பல் கலைக்கழக துணைவேந்தர் கா.சுப்பிரமணியன், பல்கலைக்கழக முதன்மையர் நா.வெங்கடேச பழனிச்சாமி மற்றும் பேராசிரியர்கள், பல்கலைக் கழக அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram