சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்
12 Mar 2026, 4:20 pm

சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்

கோவை, மார்ச் 12- சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு, கோவை மற்றும் நாமக்கல் லில் நடைபெற்ற கருத்தரங்கில் பலர் கலந்து கொண்டனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப் பட வேண்டும். பெண் தொழிலாளர்க ளுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்கப் பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து, கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் கண பதிபுதூரிலுள்ள சிஐடியு இன்ஜினியரிங் சங்க அலுவலகத்தில் வியாழனன்று மக ளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, கு.லலிதா தலைமை வதித்தார். இன்சூரன்ஸ் ஊழியர் சங்க அகில இந்திய இணைச்செயலாளர் எம். கிரிஜா, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, துணைச்செய லாளர் வி.ரம்யா ஆகியோர் கருத்துரையாற்றி னர். அப்போது, ஓய்வூதியம் பெற்றவர்களுக் கான அரசாணை நகலினை தையல் கலைஞர் கள் சங்கத் தலைவர் ஆர்.மனோகரன், கௌர வத் தலைவர் வி.ஆண்டாள் ஆகியோர் வழங்கி னர். பொதுச்செயலாளர் ஆர்.வேலுசாமி நிறைவு ரையாற்றினார். இதில், தையல் தொழிற்சங்கம் சார்பில் தேர்தல் நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கப் பட்டது. முடிவில் பி.மகேஸ்வரி நன்றி கூறி னார். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மகளிர் தின கருத் தரங்கம் மற்றும் தோழர் சந்தியா அவர்களின் படத் திறப்பு நிகழ்ச்சி மாதர் சங்கம் சார்பில் புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் கவிதா தலைமை வகித் தார். மத்தியக்குழு உறுப்பினர் சசிகலா, சந்தியா-வின் படத்தை திறந்து வைத்து கருத்துரையாற்றினார். இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், சட்டமன்ற முன் னாள் உறுப்பினருமான பி.டில்லிபாபு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் தமிழ்மணி, சுரேஷ், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ராணி, செயலாளர் செல் வராணி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பழனி யம்மாள், ஒன்றியச் செயலாளர்கள் தேவராஜ், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.