முந்தய பக்கம்

உலக மகளிர் தின இலக்கியச் சந்திப்பு

1 Mar 2026, 5:56 pm
உலக மகளிர் தின இலக்கியச் சந்திப்பு
<p><strong>உலக மகளிர் தின இலக்கியச் சந்திப்பு</strong></p> <p>கோவை, மார்ச் 1- தமுஎகச சார்பில், உலக மகளிர் தின சிறப்பு இலக்கியச் &nbsp;சந்திப்பு மற்றும் கவியரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் சார்பில், உலக மகளிர் தின சிறப்பு இலக்கியச் சந்திப்பு &nbsp;மற்றும் கவியரங்கம், கோவை தாமஸ் கிளப்பில் ஞாயிறன்று &nbsp;நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆ.கலைவாணி தலைமை வகித்தார். பு.காயத்ரி வரவேற்றார். முன்னதாக, மறைந்த &nbsp;கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு &nbsp;மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, எழுத்தாளர் நான்சி கோமகன் &lsquo;மையிருளி&rsquo; நாவலை அறி முகப்படுத்தி பேசினார். எழுத்தாளர் கி.அமுதா செல்வி ஏற் புரையாற்றினார். இதைத்தொடர்ந்து &ldquo;பெண்கள் தனித்து முடி வெடுக்கும் இடத்தை எங்கு எட்டியிருக்கிறார்கள்? வீட்டிலா? &nbsp;பணியாற்றும் இடத்திலா? பொது வாழ்விலா?&rdquo; என்ற தலைப் பில் வழக்கறிஞர் தேன்மொழி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் கவிஞர் பிரியா சந்திரன், முனைவர் &nbsp;வெ.மைதிலி மற்றும் கவிஞர் சுடர் விழி ஆகியோர் பங்கேற்று &nbsp;வாதிட்டனர். மற்றொரு நிகழ்வாக கவிஞர் சண்முக தேவி தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் ஏராளமான பெண் கள், கவிதைகள் வாசித்தனர். இந்நிகழ்வில், தமுஎகச மாவட் டத் தலைவர் மு.காளிநாதன், செயலாளர் அ.கரீம், துணைத் தலைவர் தி.மணி, நிர்வாகி தங்க முருகேசன் உட்பட பலர் &nbsp;கலந்து கொண்டனர். முடிவில், ராகப்பிரியா நன்றி கூறி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram