தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்கள்

9 Mar 2026, 4:24 pm
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்கள்
<p><strong>சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்கள்</strong></p> <p>கோவை, மார்ச் 9- மாதர், வாலிபர் மற்றும் ஓய்வூதி யர்கள் உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் (TNGPA) கோவை மாவட்டக் கிளை &nbsp;சார்பில் சர்வதேச மகளிர் தின விழா &nbsp;திங்களன்று தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க கூட்ட அரங்கில், சங்க மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஆர். காந்திமதி மற் றும் மாவட்ட இணைச் செயலாளர் வி.ஆர். சாந்தாமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இணை அமைப்பாளர் எஸ். சாரதா மணி தேவி அனைவரையும் வர வேற்றார். மாவட்டத் தலைவர் எஸ். &nbsp;மதன் விழாவினை துவக்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ஆர்.சுஜாதா, மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினர் கே.ஜானகி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தேசிய &nbsp;இணைச் செயலாளர் எம்.கிரிஜா &nbsp;மற்றும் அனைத்து துறை ஓய்வூதி யர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் என்.அரங்கநாதன் ஆகி யோர் உரையாற்றினர். முடிவில், &nbsp;மாவட்ட மகளிர் துணைக்குழு வைச் சேர்ந்த ஆர். நீலாராணி நன்றி &nbsp;கூறினார். இதேபோன்று அகில இந்திய &nbsp;பிஎஸ்என்எல்-டாட் பென்சனர்கள் சங்கத்தின் (AIBDPA) சார்பில் கோவையில் உள்ள மத்திய தொலைபேசி நிலைய வளாகத் தில் மகளிர் தின சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கிளைத் தலைவர் ஏ. சுப்புலட்சுமி தலைமை வகித்தார். கிளைச் செய லாளர் சூரியகலா சௌந்தரராஜன் அனைவரையும் வரவேற்றுப் பேசி னார். சங்கத்தின் மாநில மகளிர் &nbsp;ஒருங்கிணைப்புக் குழுவின் கன் வீனர் வி.பி. இந்திரா சிறப்புரையாற் றினார். உதவி பொதுச்செயலாளர் ஏ.குடியரசு வாழ்த்திப் பேசினார். மகளிர் கிளைப் பொருளாளர் டி. குணமாலை நன்றி கூறினார். இந்திய ஜனநாயக வாலிபர் &nbsp;சங்க அன்னூர் ஒன்றியக்குழு பொன் னேகவுண்டன்புதூர் கிளையின் சார்பாக ஞாயிறன்று கேக் வெட்டி &nbsp;கொண்டாடப்பட்டது. இந்நிகழ் வில் மாதர் சங்க நிர்வாகி அனுசுயா &nbsp;தலைமை வகித்தார். வாலிபர் சங்க &nbsp;மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா, நிர்வாகிகள் தீபிகா, ரூபா, மனிஷா, காவியா உள்ளிட்ட பலர் &nbsp;கலந்து கொண்டனர். சேலம் சேலம் புதிய பேருந்து நிலையம் &nbsp;பகுதியில் அனைதிந்திய ஜனநா யக மாதர் சங்கம், இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் சேலம் வடக்கு &nbsp;மாநகரம் சார்பில் கேக் வெட்டி &nbsp;பொதுமக்களுக்கு வழங்கி கொண் டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு மாதர் &nbsp;சங்க மாநகர ஒருங்கினைப்பாளர் ஆர்.ரம்யா தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஜி. கவிதா, மாநகர நிர்வாகிகள் கற்ப கம், பாக்யா, பிரயதர்ஷினி, வாலி பர் சங்க மாநகர செயலாளர் மனோ கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேட்டூர் அணை சின்ன பார்க் &nbsp;அருகில் சிஐடியு மற்றும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட ஊரக &nbsp;வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர் சங்க மாவட்ட துணைத்தலைவர் &nbsp;டி.தனம் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் பி. விஜயலட்சுமி, மாதர் சங்க மாவட் டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, சிஐ டியு கட்டிடத் தொழிலாளர் சங்க &nbsp;மாவட்டச் செயலாளர் சி.கருப் பண்ணன், சிஐடியு சேலம் மாவட்டப் &nbsp;பொருளாளர் வீ.இளங்கோ ஆகி யோர் சிறப்புரையாற்றினர். நிறை வாக இல்லம் தேடி மருத்துவ சங்கத் தின் மாவட்டத் தலைவர் பாலாம் பிகா நன்றி கூறினார். திருப்பூர் திருப்பூர் தெற்கு மாநகரம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் &nbsp;சங்கம் சார்பில் பட்டுக்கோட்டை யார் நகரில் சர்வதேச மகளிர் தின &nbsp;கொடியேற்று விழா, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. திருப்பூர் தெற்கு மாநகர துணைத் தலைவர் &nbsp;ஏ.சகிலா தலைமை தாங்கினார். தெற்கு மாநகரத் தலைவர் ஜி.சுமதி &nbsp;கொடியேற்றி வைத்தார். பகுதி யின் மூத்த பெண் தோழர் கேக் வெட்டினார். இதில், சிபிஎம் தெற்கு &nbsp;மாநகரச் செயலாளர் த.ஜெயபால், &nbsp;மாதர் சங்க தெற்கு மாநகரச்செய லாளர் டி. மினி, தெற்கு மாநகர &nbsp;பொருளாளர் ஜி. செண்பகவல்லி &nbsp;மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க &nbsp;தெற்கு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் பேபி, தமுஎகச தெற்கு &nbsp;கிளைத் தலைவர் கே. கோவிந்த ராஜ் உள்ளிட்டு பலர்பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.