கடலூரில் உலக மகளிர் தின விழா சாதனைப் பெண்களுக்குக் கௌரவம்
31 Mar 2026, 4:50 pm
<p><strong>கடலூரில் உலக மகளிர் தின விழா சாதனைப் பெண்களுக்குக் கௌரவம்</strong></p>
<p>கடலூர், மார்ச் 31- கடலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வூதியர் சங்கங்கள் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 26 பெண்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. சங்க நிர்வாகிகள் உமா, தனலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.</p>
