சிபிஎம் மாநிலக் குழு அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின விழா
8 Mar 2026, 3:42 pm
<p><strong>உலக மகளிர் தினம்: இளம்பெண்கள் திருநங்கை, ஆளுமைகள் கவுரவிப்பு</strong></p>
<p>சென்னை, மார்ச் 8- உலக உழைக்கும் பெண்கள் தினத்தை யொட்டி பகிர்வு நவீன கலை இலக்கிய பரி மாற்றம் சார்பில் இளம் பெண் திருநங்கை இளைஞர்களுக்கு விருது வழங்கும் கலை விழா சென்னை பெரம்பூரில் ஞாயிறன்று (மார்ச் 8) நடைபெற்றது. வழக்கறிஞர் சமூக செயல்பாட்டாளர் பா.ஹேமாவதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எழுத்தாளர் தமிழ் மணவாளன் வரவேற்புரை ஆற்றினார். எழுத்தாளர் வான்மதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சமூக செயல்பாட்டாளர் தனபாக்கியம், நாடகவியலாளர் பிரம்மி, அங்கன்வாடி ஊழியர் எழிலரசி, தூய்மை பணியாளர் லதா,தேசிய கைப்பந்தாட்ட வீராங்கனை கிரிஷா, சமூக செயல்பாட்டாளர் அம்சா, கவிஞர் அக்ஷயா, மஞ்சுளா (பாடநூல் கழகம்), ஆசிரியர் சந்தியா, செல்லப் பிராணிகள் நல ஆர்வலர் ஹேமாவதி ஆகி யோருக்கு நினைவு பரிசுகளை வழங்கி னார். இந்நிகழ்வில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், தற்காப்பு கலை, கவிஞர்களின் கவிதை வாசிப்பு உள்ளிட்ட கலை இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் எழுத்தாளர்கள் எழிலரசு ,எழுத்தாளர் அமிர்தம் சூர்யா, கவிஞர் டாக்டர் நடராஜன், கடமை வசந்த், எழுத்தாளர் நிமோஷினி, குழந்தைகள் நல ஆர்வலர் மலர்விழி மற்றும் சுதா ஸ்டெல்லா தமிழரசி ஆகியோர் பங்கேற்றனர்.</p>
