சர்வதேச மகளிர் தின விழா - கருத்தரங்கம்
14 Mar 2026, 2:57 pm
<p><strong>சர்வதேச மகளிர் தின விழா - கருத்தரங்கம்</strong></p>
<p>கோவை, மார்ச் 14- அரசு ஊழியர் சங்கம் சார் பில், கோவையில் நடைபெற்ற மகளிர் தின விழா மற்றும் கருத் தரங்கில் பலர் கலந்து கொண் டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கோவையில் சர்வதேச மகளிர் தின விழா மற்றும் ஒருங்கி ணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்த கருத்த ரங்கம் சனியன்று நடைபெற்றது. தாமஸ் கிளப்-பில் நடைபெற்ற இந்நிகழ்வின் துவக் கத்தில், சங்கத்தின் கொடியை மாநில துணைத் தலைவர் சி.பரமேஸ்வரி ஏற்றி வைத்தார். மகளிர் துணைத்தலைவர் வி.சாந்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ச.ஜெகநாதன் துவக்கவுரையாற்றினார். இன்சூரன்ஸ் ஊழி யர் சங்க அகில இந்திய இணைச்செயலாளர் எம்.கிரிஜா சிறப்புரையாற்றினார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.செந்தில்குமார், ஓய்வூதியர் சங்க மாவட் டச் செயலாளர் கே.அருணகிரி உள்ளிட்ட சகோதர சங்கங்களின் தலைவர்கள் வாழ்த் திப் பேசினர். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சி.பரமேஸ்வரி நிறைவுரை யாற்றினார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (TAPS) குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட இணைச்செயலாளர் சின்ன மாரிமுத்து வர வேற்றார். மாநில துணைத்தலைவர் ஆ.அம்ச ராஜ் சிறப்புரையாற்றினார். மாவட்டப் செய லாளர் ப.செந்தில்குமார் நிறைவுரையாற்றி னார். மாவட்டப் பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.</p>
