தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சர்வதேச ஜவுளி மாநாடு: நலத்திட்டங்கள் வழங்கல்

29 Jan 2026, 5:39 pm
சர்வதேச ஜவுளி மாநாடு: நலத்திட்டங்கள் வழங்கல்
<p><strong>சர்வதேச ஜவுளி மாநாடு: நலத்திட்டங்கள் வழங்கல்</strong></p> <p>கோவை, ஜன.29- கோவையில் நடைபெற்ற சர்வ தேச ஜவுளி மாநாட்டில் ரூ.1,100 &nbsp;கோடிக்கும் அதிகமான நலத் திட்டங்களை துணை முதலமைச்சர் &nbsp;உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். கோவை கொடிசியா வளாகத் தில் வியாழனன்று முதலாவது சர் வதேச ஜவுளித் தொழில் மாநாடு 360 &nbsp;(International Textile Summit 360) நிகழ்வில், தமிழக துணை முத லமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஜவுளித் தொழிலை மேம்படுத்தும் நோக்கில் &nbsp;பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, தமிழகத்திலிருந்து ஜவுளி ஏற்றுமதியில் முத்திரை பதித்த நிறுவனங்களை ஊக்குவிக் கும் வகையில் &lsquo;சிறந்த ஏற்றுமதியா ளர் விருதுகள்&rsquo; வழங்கப்பட்டன. இதில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் என 5 பிரிவுக ளில் முதலிடம் பிடித்த 5 நிறுவனங் களுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசுத் &nbsp;தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ் களை துணை முதலமைச்சர் வழங்கினார். மேலும், 10 நிறுவ னங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் கள் வழங்கப்பட்டன. பழைய நூற்பு இயந்திரங்களை நவீனப்படுத்த பெறப்படும் வங்கி கடன்களுக்கு 2% வட்டி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஒரு நூற்பாலைக்கு ரூ.11.70 லட்சம் வட்டி மானியத்திற்கான ஆணை வழங்கப்பட்டது. அதேபோல், சாதாரண விசைத்தறிகளை நவீன ரேப்பியர் தறிகளாக மாற்றவும், புதிய தறிகள் வாங்கவும் 12 &nbsp;விசைத்தறியாளர்களுக்கு மொத் தம் ரூ.67.49 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது. துணி நூல் பதனிடும் பிரிவில் புதிய ஆலைகள் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் முன்வந்த 3 நிறுவனங்களுக்கு மூலதன முத லீட்டு மானியமாக சுமார் ரூ.1,092 &nbsp;கோடி வழங்க அரசின் கொள்கை &nbsp;அளவிலான ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டது. இது ஜவுளித் துறையில் மிகப்பெரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகலமான துணி அச்சிடும் இயந்திரங்கள் வாங்கிய 2 நிறுவ னங்களுக்கு ரூ.38.35 லட்சம் மானி யம். ஆயத்த ஆடை பிரிவில் தானி யங்கி துணி வெட்டும் இயந்திரம் வாங்கிய 3 நிறுவனங்களுக்கு ரூ.142.94 லட்சம் மானியம். பல்ல வாடா தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா நிறுவனத்திற்கு மாநில அர சின் பங்காக ரூ.1.30 கோடி மானி யம், கல்வி நிறுவனங்கள் மற்றும் &nbsp;தொழில் நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும் 6 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ரூ.138.32 லட்சம் நிதியுதவி வழங்க அறிவிப்பு வெளிட்டார். இந்த மாநாட்டின் மூலம் கோவையின் ஜவுளித் தொழில் உல கத் தரத்திற்கு உயரும் என்றும், குறிப்பாக செயற்கை இழைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி (Technical Textiles) பிரிவில் தமிழ கம் முதன்மை மாநிலமாகத் திகழும் &nbsp;என்றும் துணை முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை &nbsp;அமைச்சர் ஆர்.காந்தி, முன்னாள் &nbsp;அமைச்சர் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மேயர் ரங்கநாயகி, கைத் தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் &nbsp;கதர்த்துறை அரசு செயலாளர் அமுதவல்லி, இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் உன்னி கிருஷ்ணன், எல்எம் டபுள்யு மேலாண் இயக்குனர் சஞ்சய் ஜெய வர்த்தனவேலு, சந்திரா குழும மேலான் இயக்குநர் நந்தினி ரங்க சாமி, ஆடை ஏற்றுமதி அபிவிருத் திக் கழகம் தலைவர் சக்திவேல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற் றும் ஜவுளித் துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.