தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓய்வூதியர் தினம்; ஆர்ப்பாட்டம்

2 Oct 2026, 12:02 am
ஓய்வூதியர் தினம்; ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் தினம்; ஆர்ப்பாட்டம்

கோவை, அக்.1-பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டை மீண்டும் தொடர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சர்வதேச ஓய்வூதியர் தினத்தையொட்டி, பல்வேறு பகுதிகளில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கங்களின் சார்பில்கோவை பிஜிஎம் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.குடியரசு மற்றும் கூட்டு சங்கங்களின் நிர்வாகிகள் தனுஷ்கோடி, கே.ஆர்.பழனிச்சாமி, செந்தூர்பாண்டியன் ஆகியோர் தலைமைவகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சேலம்

இதேபோன்று, சேலம் பழைய பேருந்து நிலையம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பின் நிர்வாகி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நிர்வாகிகள் கோபால் வேணுகோபால் பலராமன் தமிழ் மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நாமக்கல்

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம்வியாழனன்று நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் பி.கே.ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசுமற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் எஸ்.மணியாரன், எஸ்.ராமசாமி, பி.அன்பழகன், இ.ராமசாமி, இளங்கோவன், குப்புசாமி, காளியப்பன், உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாககலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஈரோடு

இதேபோன்று, ஈரோடு காளை மாடு சிலை அருகே நடைபெற்ற ஓய்வூதியர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தர்ணாவிற்கு என்சிசிபிஏ மாவட்டச்செயலாளர் பி.சின்னச்சாமி தலைமை வகித்தார். இதில், அஞ்சல் ஓய்வூதியர் சங்கம் என்.ராமசாமி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க தலைவர் வி.பன்னீர் செல்வம், எஸ்என்பிடபுள்யு திருநாவுக்கரசு, தட்சிண ரயில்வே ஓய்வூதியர் சங்கத்தின் சி.முருகேசன், சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தின் ராஜன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் எம்.ஆர்.பெரியசாமி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர்சங்கத்தின் சி.மணி உள்ளிட்டோர் உரையாற்றினர். முடிவில், எப்சிபிஏ செயலாளர் சி.பரமசிவம் நன்றிகூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.