சிதம்பரம் வீனஸ் பள்ளியில் உலக தாய்மொழி தினம்
21 Feb 2026, 4:39 pm
<p><strong>சிதம்பரம் வீனஸ் பள்ளியில் உலக தாய்மொழி தினம்</strong></p>
<p>சிதம்பரம், பிப். 21- சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிறுவனர் வீனஸ் குமார் தலைமை தாங்கினார். தாளாளர் ஏ.ரூபியால்ராணி முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குநர் வி.அருண் மற்றும் தலை வர் லியோனா கலந்து கொண்டனர். மாணவர்களிடத்தில் தாய்மொழி யின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் தமிழின் பெருமை, பாரம்பரியம், வளமை ஆகியவற்றை எடுத்துரைக்கும் கவிதை, உரை, நாடகங்கள் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தமிழைக் காக்கப் போராடிய தியாகிகளை நினைவு கூரும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மேலும் உருது, ராஜஸ்தானி, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களும் தங்கள் மொழிகளின் சிறப்புகளை விளக்கிப் பேசினர். அதேபோல் தேரடி வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.</p>
