தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: சிறந்ததொரு உலகத்திற்காகப் போராடுவோம்

2 Dec 2025, 4:11 pm
உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: சிறந்ததொரு உலகத்திற்காகப் போராடுவோம்

உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: சிறந்ததொரு உலகத்திற்காகப் போராடுவோம்

டிசம்பர் 3, உலகம் முழுவதும் மாற்றுத்திற னாளிகளுக்கான சர்வதேச தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1992ஆம் ஆண்டு முதல் முந்தைய ஆண்டுகளைப் போலவே  இந்த ஆண்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திற னாளிகளை கவுரவித்தல், உதவிகளை விநியோகிப்ப தற்கான முகாம்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்ற சடங்கு நிகழ்வுகளாகக் குறைக்கப்படும் அபாயமும் உள்ளது. இந்தத் திட்டங்கள் நல்ல நோக்கத்துடன் இருந்தாலும், இயலாமை மற்றும்  ஒதுக்கி வைத்தல் போன்ற ஆழமான பிரச்சனை களைத் தீர்க்கத் தவறிவிடுகின்றன.

இந்தப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, ‘சமூக முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சமூகங் களை வளர்ப்பது’ என்ற ஐ.நா.வின் கருப்பொருளை, சமூகம் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகள் அனைத்திலும் ஊனத்தை அகற்றுவதற்கான ஒரு தீவிரமான அழைப்பாகக் கருத வேண்டும். மாற்ற விரும்பாத முதலாளித்துவ கட்டமைப்பு மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர் பான ஐ.நா. மாநாட்டை ஏற்றுக்கொள்வதும், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டத்தை இயற்று வதும் முக்கியமான மைல்கற்களாக இருந்தாலும், இரண்டும் முதலாளித்துவ கட்டமைப்பால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடு இருப்பதை அவை ஒப்புக்கொண்டாலும், இயலாமை மற்றும் சமத்துவமின்மையை நிலைநிறுத்தும் பொருளாதார மற்றும் சமூக அமைப்புகளை மாற்ற அவை விரும்புவதில்லை. மாற்றுத்திறனாளிகள் பலவித வடிவங்களில் தாங்கள் ஓரங்கட்டப்படுவதை எதிர்கொள்கின்றனர், இயலாமை மற்றும் பொருளாதார சமத்துவ மின்மைக்கிடையே அவர்கள் வாழ்கின்றனர். பாகுபாடு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களில் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் அல்லாதவர்களை விட வறுமையில் வாடும் வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் பின் தங்கச் செய்யும் நிலை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்  கூட, மாற்றுத்திறனாளிகள் பல  பற்றாக்குறைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை  ஒப்புக்கொள்கிறது.

இதர மக்களுடன் ஒப்பிடும் போது, அவர்கள் அதிக வறுமை விகிதங்கள், குறைந்த கல்வியறிவு மற்றும் வேலையின்மை ஆகியவற்றை அனுபவிக்கின்றனர்.  இது அவர் களின் சமூக விலக்கத்தை மேலும் அதிகரிக்கும் தடை களாகும். அது கூறுகிறது: “தற்போதுள்ள தரவுகள் மாற்றுத்திறனாளிகள் பல பற்றாக்குறைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை குறிக்கிறது. இதர மக்க ளுடன் ஒப்பிடும்போது, அவர்கள் வறுமை, குறைந்த கல்வியறிவு, வேலை யின்மை ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படு கின்றனர். இது அவர்களை மேலும் பின்தங்க வைக்கிறது. மேலும் பாலினம், சாதி, கிராமப்புற/நகர்ப்புறப் பின்னணி போன்றவற்றின் காரணமாக வும் அவர்கள் பின் நிலைக்குள் தள்ளப்படுகிறார்கள்.” சமூக, பொருளாதார நீதிக்கான போராட்டம் வர்க்கம், சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தில் ஒரு பிரிவினரை ஏற்கனவே ஓரங்கட்டி வைத்திருக்கக்கூடிய நிலை யில், மாற்றுத்திறனாளிகளும் பல வகைகளில் ஓரங்கட்டப்படுவதை எதிர்கொள்கின்றனர். உதாரணமாக, ஒரு தலித் மாற்றுத்திறனாளி பெண்,  தன்னுடைய உடல் இயலாமையோடு சாதிய  ஒடுக்குமுறையையும், பாலின ஒடுக்குமுறையை யும் சேர்த்தே எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார். எனவே, சமூக மற்றும் பொருளாதார

நீதிக்கான பரந்த போராட்டங்களிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான போராட்டத்தைத் தனிமைப்படுத்திப் பார்க்க முடியாது. ஆறில் ஒருவர்... 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2 கோடியே 68 லட்சம் மக்கள் மாற்றுத்திறனாளிகள் (மக்கள் தொகையில் 2.21 சதவீதம்)-ஆக  உள்ளனர். இந்தப் புள்ளிவிவரங்கள் பல்வேறு காரணங்களுக்காக சர்ச்சைக்குரியவை. உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, உலக மக்கள் தொகையில் சுமார் 16 சதவீதம் பேர் அல்லது ஆறு பேரில் ஒருவர் குறிப்பிடத்தக்க ஊனத்தை அனு பவிக்கின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் மற்றும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்புகளின் மதிப்பீடுகள் இரண்டும் ஏழைப் பகுதிகளிலும், ஒதுக்கப்பட்ட சமூகங்களிலும் மாற்றுத்திறனாளிகள்

அதிகமாக இருப்பதைக் காட்டுகின்றன. இந்தியாவில் உள்ள 19 கோடியே 30 லட்சம் வீடுகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான வீடுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஓய்வூதியம், இலவச சுகாதாரம், வீட்டுவசதி, கல்வி போன்ற உலகளாவிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டு மல்ல, சமூக நீதி மற்றும் சமத்துவத்தை மதிக்கும் எந்தவொரு சமூகத்திற்கும் அவசியமானவை களாகும். ‘யாரும் பின்தங்கியிருக்கக் கூடாது’ என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு, மிகவும் ஒதுக்கப்பட்டவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பரந்த உலகளாவிய திட்டங்களின் ஓர் அங்கமாக மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய

கொள்கைகள் இருக்க வேண்டும். போராடும் இயக்கங்களுடன் இணைந்து... மாற்றுத்திறனாளிகள் இயக்கம், விளிம்புநிலை மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற போராடும் மக்களின் இயக்கங்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களுடனான ஒற்றுமை, சமூக நீதி, பாலின நீதி ஆகியவற்றில் அது வேரூன்ற வேண்டும். இந்த ஒற்றுமைகளை உருவாக்குவதன் மூலம்தான் மாற்றுத்திறனாளிகள் செல்வத்தை மறுபகிர்வு செய்தல், வளங்களை அணுகுதல் மற்றும் பொது உள்கட்டமைப்பை மறு வடிவமைப்பு செய்தல் ஆகியவற்றிற்கு முன்னு ரிமை அளிக்கும் ஒரு சமூகத்தைக் கோர முடியும். சுரண்டல் அமைப்பின் பாதிக்கப்பட்டவர்களாக, மாற்றுத்திறனாளிகள், உள்ளடக்கிய சமூகத்திற் கான போராட்டத்தில் மாற்றத்தின் முன்னணி ஊழியர்களாக மாற வேண்டும். அவர்கள் தங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதன் மூலம் தங்களின் வல்லமையையும் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதர போராடும் அமைப்புகளோடு கூட்டு  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் ஒற்றுமையைக் கட்டி எழுப்ப வேண்டும். தங்களை விளிம்புநிலை மக்களாக பாவித்திடும் இந்த சமூக அமைப்பை சவாலுக்கு அழைப்பதற்கு இதுவே  மாற்றுத்திறனாளிகளுக்கான முன்நிபந்தனை களாகும். டிசம்பர் 3 வெறும் சடங்கு சம்பிரதாயங்கள் அல்லது அடையாளச் செயல்களுக்கான நாளாக இருக்கக்கூடாது. அதற்குப் பதிலாக அது போராட்ட நட வடிக்கைக்கான அழைப்பாக இருந்திட வேண்டும்.   - தமிழில்: ச.வீரமணி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.