சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்!
3 Dec 2025, 7:31 am
<p>உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 3) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.<br />
கடந்த 1992ஆம் ஆண்டு ஐநா சபையின் மூலம் சர்வதேச மாற்ருத்திறனாளிகள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 03ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறுது.<br />
மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் எதிர்கொள்கிற சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், அவர்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வலியுறுத்துவதும் இந்த தினத்தின் முக்கியப் பணியாகும்.<br />
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிபிஎம் மாநிலச்செயலாள்ர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.</p>
