மதுரை மேற்கு மாவட்ட பாஜகவில் உட்கட்சி பூசல்
16 Mar 2026, 4:46 pm
<p><strong>மதுரை மேற்கு மாவட்ட பாஜகவில் உட்கட்சி பூசல்</strong></p>
<p>மதுரை, மார்ச் 16- மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. மாவட்டத் தலை வர்கள் தன்னிச்சையாகச் செயல்பட்டு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி செல்லம்பட்டி தெற்கு மண்டல் தலைவர் க.மணிகண்டன், கட்சியின் தேசியத் தலைமையிடம் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த புகார் கடிதம் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் மணிகண்டன் அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்திற்காக உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் இருந்து 43 வாகனங்கள் மட்டுமே சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், 60 வாக னங்கள் சென்றதாக கணக்கு காட்டி மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.இன்பராணி மற்றும் மாவட்டத் தலை வர் கே.சிவலிங்கம் ஆகியோர் நிதி முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களுக் கான உணவுக்கான பணமும் முறை யாக வழங்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், 2025 அக்டோபர் 12 அன்று மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கிய “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ரூ.2 லட்சம் ஒதுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நிதியில் இருந்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் வெறும் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை மட்டுமே வழங் கப்பட்டதாகவும் புகாரில் குறிப்பிடப் பட்டுள்ளது. கடும் அதிருப்தி பாஜக கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி களுக்காக தொண்டர்கள் தங்களது சொந்த செலவில் வாகனங்களில் செல்வது அல்லது உணவு வாங்குவது வழக்கமல்ல. கட்சியே நிதி ஒதுக்கி வாகன வசதி மற்றும் உணவு உள் ளிட்ட ஏற்பாடுகளை செய்யும் நடை முறை உள்ளது. இந்த நிலையில், கூட் டங்களுக்கு வந்த தொண்டர்களுக்கான உணவு உள்ளிட்ட செலவுகளும் முறை யாக வழங்கப்படாமல் இருப்பது கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தரக்குறைவான நடத்தை குற்றச்சாட்டு இந்த முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பினால், தனக்கு மாநி லப் பொதுச் செயலாளர் ராம சீனி வாசன் முழு ஆதரவு இருப்பதாக மாவட் டப் பொதுச்செயலாளர் இன்பராணி கூறி தரக்குறைவான வார்த்தைகளில் பேசுவதாகவும், மாவட்டப் பொருளா ளர் ராக்கப்பன் அலட்சியமாக பதில ளிப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கூட்டங்களில் பங்கேற்க தடை கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியதன் பின்னர், இனி எந்தக் கட்சி கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டாம் என மாவட்டத் தலைவர் சிவ லிங்கம் மற்றும் பொதுச்செயலாளர் இன்பராணி வாய்மொழி உத்தரவு வழங்கியுள்ளதாக மணிகண்டன் குற்றம்சாட்டியுள்ளார். நடவடிக்கை எடுக்க கோரிக்கை கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு இத்தகைய நிதி முறைகேடு களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாவட்ட நிர்வாகிகள் மீது உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும், செல்லம்பட்டி தெற்கு மண்டல் தலை வராகத் தனது பொறுப்பைத் தொடர அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் தேசியத் தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இந்த புகார் கடிதத்து டன் சக்தி கேந்திரா பொறுப்பா ளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் கையொப்பங்களும் இணைக்கப்பட் டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் மதுரை மேற்கு மாவ ட்ட பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
