பல் சமய நல்லிணக்க கூடுகை
27 Mar 2026, 3:15 pm
<p><strong>பல் சமய நல்லிணக்க கூடுகை</strong></p>
<p>திருவில்லிபுத்தூர், மார்ச் 27- விருதுநகர் மாவட்டம், திருவல்லிபுத்தூர் சிஎஸ்ஐ தூய தோமா ஆலயமும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவும் இணைந்து திருவலிபுத்தூர் தூய தோமா ஆலய வளா கத்தில் தவக்கால பல் சமய நல்லிணக்க கூடுகை நடை பெற்றது. தூய தோமா ஆலய குருசேகர தலைவர் ரெவ ரன்ட் ஐயா பால் தினகரனின் ஒருங்கிணைப்பில் நடை பெற்ற இந்நிகழ்வில் திரு வில்லிபுத்தூர் ஜும்மா புது பள்ளிவாசலின் இமாம் ஹாஜி ரஹ்மத்துல்லா, ஜனாப் எம்.கே.முகமது மைதீன், சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்ட செயலாளர் ஏ மரிய டேவிட், கவிஞர் காளி யப்பன். தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலா ளர் கவிஞர் லட்சுமி காந்தன், திருவில்லிபுத்தூர் ஆர்சி திருச்சபை உதவி பங்குத் தந்தை அந்தோணி ஜீசஸ் மதுரை பங்குத்தந்தை பால் பிரிட்டோ மற்றும் சிஎஸ்ஐ தூய தவமா ஆலய நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். சிஎஸ்ஐ தேவாலயங்க ளின் ரெவெரென்ட் ஜான் கமலேசன் நிறைவு செய்து உரையாற்றினார்.</p>
