தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூர் சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்

29 May 2026, 8:32 pm
திருப்பூர் சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்

திருப்பூர் சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்

திருப்பூர், மே 29 - திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலக மான தியாகி பழனிச்சாமி நிலையத்தில் வெள்ளிக்கிழமை அன்று சாதி மறுப்பு சீர்திருத்த திருமணம் நடத்தி வைக்கப் பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (வயது 23). இவரது குடும்பத்தார் திருப்பூரில் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

அதேபோல கோவில்பட்டியைச் சேர்ந்த தர்ஷினி (வயது 19). இவரது குடும்பத் தார் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் காங்கேயம் அருகே தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்த போது நட்பு ஏற்பட்டுள் ளது.

சிலம்பரசன் படிப்பை முடித்து திருப்பூரில் உள்ள தனியார் பணியில் தர கட்டுப்பாட்டு அலுவலராக வேலை செய்து வருகிறார்.

இவரும் தர்ஷினி யும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவர்களது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும் சிலம்பர சனின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரி வித்தனர்.

வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செய்து கொள்ள அவரது பெற்றோ ர்கள் சம்மதிக்கவில்லை.

இதையடுத்து, சிலம்பரசன், தர்ஷினி இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினரை அணுகினர்.

மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரு வரது குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இதில் தர்ஷி னியின் குடும்பத்தார் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாலும், சிலம்பரசன் பெற்றோர் சம்மதிக்கவில்லை.

இதை யடுத்து, வயது வந்த இருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவல கத்தில் சாதி மறுப்பு சீர்திருத்தத் திரு மணம் செய்து கொள்ளதீர்மானித்தனர். திருமணம் - கர ஒலி வெள்ளியன்று திருப்பூர் கட்சி அலு வலகத்தில், இவர்களது திருமணத் திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.மூர்த்தி தலைமை ஏற் றார்.

மாநிலக்குழு உறுப்பினர் கே. காம ராஜ் மணமகன் சிலம்பரசன், மணமகள் தர்ஷினி இருவருக்கும் மாலை எடுத்துக் கொடுத்தார். அங்கு கூடியிருந்தவர்கள் கர ஒலி எழுப்ப, மணமக்கள் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வடக்கு ஒன்றிய நிர்வாகி கே.எஸ்.கற்பகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் நிரூ பன் சக்கரவர்த்தி, சிஐடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஜி. சம்பத், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினர்.

மண மக்களுக்கு புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. மணமகன் சிலம்ப ரசன் விழாவில் பங்கேற்ற அனைவரு க்கும் நன்றி கூறினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பா ளையம் நகர செயலாளர் ச.நந்த கோபால், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப்பன், வடக்கு மாநகரச் செயலாளர் சௌந்தரராசன், தெற்கு மாநகரச் செயலாளர் டி. ஜெயபால் மற்றும் மணமகள் தாயார், உறவின ர்கள், நண்பர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த திருமணத்தை சட்டப்படி பதிவு செய்து கொள்ளவும் வழக்கறிஞர் மூலம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.