முந்தய பக்கம்

சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்புத் திருமணம்

5 Jun 2026, 3:24 am
சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்புத் திருமணம்
<p><strong>சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்புத் திருமணம்</strong></p><p>திருவண்ணாமலை, ஜூன் 4- திருவண்ணாமலை மாவட்டம், அய்யம் பாளையத்தைச் சேர்ந்த அய்யாகண்ணு - மனவெழுத்தாள் தம்பதியரின் மகன் ரஞ்சன். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த ஸ்ரீராம்யாதவ் - கமலாவதி தேவி தம்பதிய ரின் மகள் பிரித்தி குமாரி. இவர்கள் இரு வருக்குமான சுயமரியாதை சாதி மறுப்புத் திருமணம், திருவண்ணாமலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத் தில் வியாழக்கிழமை (ஜூன் 4) நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.செல்வன் தலை மையில், வழக்கறிஞர் எஸ். அபிராமன் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சாதி மறுப்புத் திருமணத்தைக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், இரா. பாரி, ஏ. லட்சுமணன், ந. சேகரன், எம். பிரகலநாதன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எஸ். ராமதாஸ், நிர்வாகிகள் குபேந்திரன், ஆர். ரவி, சிலம்பரசன் உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு மணமக்களைப் பாராட்டி, தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram