தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் தலைமை நீதிபதிக்கு 2,000 க்கும் மேற்பட்ட அறிவுஜீவிகள் கடிதம்!

27 Sept 2026, 10:01 pm
எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் தலைமை நீதிபதிக்கு 2,000 க்கும் மேற்பட்ட அறிவுஜீவிகள் கடிதம்!
<p><strong>எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் தலைமை நீதிபதிக்கு 2,000 க்கும் மேற்பட்ட அறிவுஜீவிகள் கடிதம்!</strong></p><p>புதுதில்லிஇந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மற் றும் தற்போது சர்ச்சைக் குள்ளாகியுள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறை (எஸ்ஐஆர்) குறித்து நீதித் துறை அவசரத் தலையீடு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளுக்கு 2,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொறுப்புள்ள அறிவுஜீவிகள் கையெழுத்திட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:</p><p>“வாக்காளர் தரவுத்தளத்தை மையப்படுத்துதல், தேர்தல் படிவங்களில் மாற்றங்கள் செய்தல், திருத்த நடைமுறையில் உள்ள இசிஐநெட்’ (ECINet) தொழில்நுட் பத் தளத்தைப் பயன்படுத்துதல் மற்றும் பெருமளவிலான வாக்காளர்கள் நீக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துக் கடுமையான கவலைகள் எழுகின்றன. அதனால், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தியின் அடிப்படையிலான தேர்தல் ஆணையர்களின் குற் றச்சாட்டு, எஸ்ஐஆர் விவகாரம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையை உடனடியாக நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும். குறிப்பாக சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் களே இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாகும்; அதுவே நமதுஅரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது. வாக்காளர் பட்டியலைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட அமைப்பிற்குள் ளேயே பாதுகாப்பு அம்சங்கள் மீறப்படும்போது, ஜனநாயக நடைமுறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற நீதித்துறைத் தலையீடு அத்தியாவசியமாகிறது” என கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.