தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அறிவுப்பூர்வமான நம்பிக்கை நம்முடையது - ச. லெனின்

21 Jun 2026, 11:35 pm
அறிவுப்பூர்வமான நம்பிக்கை நம்முடையது - ச. லெனின்

அறிவுப்பூர்வமான நம்பிக்கை நம்முடையது - ச. லெனின்

‘விடுதலைப் போராட்ட காலத்தில் உங்கள் கனவு, இன்றைய நடப்பு இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, சோசலிச லட்சியம் இன்னும் கைகூடவில்லையே என்கிற ஏக்கம் உங்களுக்கு ஏற்படு வது உண்டா?’ என்று மார்க்சிய இயக்கத்தின் மறைந்த மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் ஏ. நல்லசிவன் அவர்களிடம் கேட்கப்பட்டபோது, “இல்லை, அதற்காக நான் வருந்தவில்லை. உணர்ச்சிப்பூர்வமாக அல்லாமல் அறிவுப்பூர்வமாக மார்க்சியத்தைப் புரிந்துகொண்டவன் நான். எனவே, சோசலிச மாற்றம் என்பது உடனடியாகவோ தானா கவோ வந்துவிடாது. அரசியல் களத்திலும் சமுதாயத்தி லும் நீண்ட நெடும் போராட்டத்துக்குப் பிறகே அது ஏற்படும் என்கிற புரிதலுடன்தான் பொதுவாழ்வைத் தொடங்கினேன். இன்றைக்கு நம் மக்கள் அனுபவிக்க முடிகிற முன்னேற்றங்கள், உரிமைகள் இவற்றுக்கு இதுவரை நடந்த போராட்டங்கள்தான் காரணம். இது மேலும் தொடரும் என்றே நினைக்கிறேன். ஆகவே, என் கடந்த காலம் வீணாகிவிட்டதோ என்கிற எண்ணமோ, ஏக்கமோ எனக்கில்லை. இன்று என் உடல் இவ்வளவு பலவீனமாகிவிட்டதால் முன்பு போலவோ மற்ற தோழர்கள் போலவோ உழைக்க முடியவில்லையே என்கிற ஏக்கம்தான் உண்டு. இயக்கம் மேலும் வளரவும், லட்சியத்தில் முன்னேறிச் செல்லவும் சாத்தியம் நிறைய உள்ளது. வகுப்புவாத சக்திகளும், பிரிவினைவாதிகளும், சீர்குலைவாளர் களும், சமூகவிரோதிகளும் மக்களைத் திசைதிருப்பா மல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொய்வில்லாமல் போராட்டத்தைத் தொடர வேண்டும். கனவுகள் கைகூடும்” என்றார்.

உணர்ச்சிவயப்பட்ட நம்பிக்கை விரைவில் வடிந்துபோகும். அறிவுப்பூர்வமான நம்பிக்கை வடிந்து போவதல்ல; அது சமூகத்தை வடிவமைக்கிறது. அத்த கைய அறிவுப்பூர்வமான நம்பிக்கையே மார்க்சின், மார்க்சியத்தின், மார்க்சியர்களின் நம்பிக்கையாகும். மார்க்சின் நம்பிக்கையானது கருத்தியல் ரீதியாகவும் அறிவுப்பூர்வமாகவும் ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான பெரும் விருப்பத்துடன் பிணைக்கப்பட்டிருந்தது.

தேர்தல்களால் அளவிட முடியுமா?

சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டு செயல் படும் கட்சிகளை வெறும் தேர்தல் வெற்றி தோல்வி களைக் கொண்டு மட்டும் அளவிட்டுவிட முடியாது. 2019 – 2024 காலத்தில் பாஜக 303 நாடாளுமன்ற உறுப் பினர்களுடன் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்தது. அப்போது, விவசாயிகளுக்கு எதி ரான மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. இக்காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளு மன்றத்தில் மூன்று உறுப்பினர்களை மட்டுமே கொண்டி ருந்தது. ஆனால், ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து விவசாயிகளை அணிதிரட்டி தலைநகரில் ஓராண்டுக்காலம் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான விவசாயிகள் அரங்கம் நடத்தியது. இப்போராட்டத்தின் விளைவாக வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. ஆளும் வர்க்கத்தின் குரலாக நாடாளுமன்றம் முன்வைத்த சட்டங்கள் மக்களின் குரலால் திரும்பப் பெறப்பட்டன.

2026 மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ள திரிணமுல் காங்கிரஸ், எண்பது தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. பதி னைந்து ஆண்டுகாலம் முதல்வராக இருந்த பெரிய ஆளுமை என்று ஊடகங்களால் போற்றப்பட்ட மம்தா பானர்ஜியால் தனது சொந்தக் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்ட முடிய வில்லை. பாஜக, காங்கிரஸ், நக்சல் குழுக்கள் என எல்லோரும் கூட்டு சேர்ந்து 2011-இல் மம்தா பானர்ஜி யை வெற்றிபெற வைத்தனர். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து திரிணமுல் குண்டர்களால் மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் நூற்றுக்கணக்கானோர் படு கொலை செய்யப்பட்டனர். கட்சி அலுவலகங்கள் எரிக்க ப்பட்டன. கடந்த பதினைந்து ஆண்டுகால அடக்கு முறைகளையும் கடந்து இப்போதும் மார்க்சிஸ்ட் கட்சி தான் களத்தில் மக்களோடு நிற்கிறது.

ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் கம்யூனிஸ்ட்டுகள்

கேரளத்தில் இடது ஜனநாயக அணி 2026 சட்ட மன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளபோதும் அதன் போராட்ட வீரியமும் ஆற்றலும் நிலைத்து நிற்கின்றன. கேரளப் பல்கலைக்கழகங்களில் மார்க்சி யத்தால் வழிநடத்தப்படும் மாணவர் அமைப்பே வெற்றிபெற்றது. வெற்றி ஊர்வலத்தின் மீது காங்கிரஸ் மாணவர் அமைப்பு தாக்குதல் நடத்தியது. அவர்களை உறுதியோடு எதிர்கொண்டதோடு அடுத்த நாள் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தி னர். மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் தொடுத்தது. அதை மாணவர்கள் எதிர்கொண்டனர். அடுத்தநாள் அரசியல் பழிவாங்கும் நோக்குடன் மத்திய அமலாக்கத்துறை, தோழர் பினராயி விஜயன் இல்லத்தில் ரெய்டு நடத்தியது. அவதூறுகளைப் பரப்புவதோடு ஏதேனும் ஒரு வகையில் அவரைக் கைது செய்யும் எண்ணத்தோடும் செயல்பட்டது. இடது ஜனநாயக முன்னணியின் தேர்தல் தோல்வியைப் பயன்படுத்த பாஜக திட்டமிட்டது. காங்கிரஸ் அதற்கு உடந்தையானது. ஆனால், தேர்தல் தோல்விகளால் மார்க்சிஸ்டுகள் துவண்டுவிடவில்லை என்பதை கேரளச் சாலைகள் அன்று எடுத்துக்கூறின. எல்லாச் சாலைகளிலும் செங்கொடியுடன் போராட்டம் வலுப் பெற்றது. எந்த ஆவணமும் கிடைக்காமல் அமலாக்கத் துறை வெறும் கையுடன் திரும்பிச்சென்றது. அன்று நடைபெற்ற போராட்டமும் மாணவர்களின் எழுச்சிக் கோலமும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆற்றல் தேர்தல் தோல்வியால் குறைந்திடவில்லை என்பதை எடுத்துக் காட்டின. சித்தாந்த அடித்தளமும், ஸ்தாபனக் கட்ட மைப்பும், அரசியல் இலக்கும், செயல் திட்டமும் இல்லாத எந்த இயக்கத்தாலும் இதுபோல் எழுந்து நிற்க முடியாது.

வரலாற்றின் முடிவல்ல

சோவியத் வீழ்ச்சி அடைந்தவுடன் அதன் இடத்தை நிரப்பிட முதலாளித்துவம் பெரும்பாடுபட்டது. சோச லிசம் தோற்றுவிட்டது என்றனர். பஞ்சம், பட்டினி, போர், கொலைகள், வறுமை போன்றவையே முத லாளித்துவமாக இருக்கும்போது முதலாளித்துவத்தின் வெற்றி எங்குள்ளது என்று மார்க்சிஸ்டுகள் எதிர்வினை ஆற்றினர். நடைமுறைகளைக் கடந்து சித்தாந்த ரீதியாகவும் சோசலிசத்திற்கு முடிவுகட்ட முதலாளித்துவ சக்திகள் பல வழிகளைத் தேடினர். பின்நவீனத்துவக் கருத்தாக்கம் அதன் ஒரு பகுதியே. “சோவியத்தின் வீழ்ச்சியை ‘வரலாற்றின் முடிவு’ என்ற நவதாராளவாதக் கருத்துக்கும், உலகை மாற்ற முடியாது எனும் சிந்தனைக்கும் இணையான போக்கையே பின்நவீனத்துவம் கொண்டிருந்தது. இத்தகைய போக்கு இளைஞர்களின் செயல்திறனை முடக்கி அவர்களின் சமூகப் பங்களிப்பிற்கான வாய்ப்புகளைத் தடுத்தது” என்கிறார் மார்க்சிய அறிஞர் பேராசிரியர் விஜய் பிரசாத். எவ்வித லட்சியங்களும் இல்லாத தலைமுறை யை வளர்ப்பதும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை யைத் தகர்த்தெறிவதுமே அதன் வேலைத்திட்டமாகும். உண்மையான மாற்றத்திற்கு அவசியமான பெரிய வேலைத்திட்டங்களை எல்லாம் பெரும் கதை யாடல்கள் என ஒதுக்கித் தள்ளியது. மார்க்சியத்தை யும் அது அவ்வாறே பேசியது. முதலாளித்துவத்தின் மோசமான கொள்கைகளாலும், பின்நவீனத்து வச் சித்தாந்தத்தின் தாக்கத்தாலும் பாதிக்கப்பட்டவர் களாகத்கத்தான் இன்றைய இளம் தலைமுறையினர் வளர்ந்து நிற்கின்றனர். முதலாளித்துவச் சமூகத்தால் விளைந்த இன்னல் களால் கடும் சிக்கலிலும் மனச்சோர்விலும் உள்ள இளம் தலைமுறையினரைப் பின்நவீனத்துவம் அவநம்பிக்கையில் மூழ்கடிக்கிறது. மக்களின் இன்னல்களுக்கான பிரச்சினைகளுக்கு சில நபர்களையோ, சில சித்தாந்தங்களையோ கைகாட்டிவிட்டு ஒரு அசாதாரண நிலையை உரு வாக்குவதோடு, அதற்கான மாற்றாக ஒரு நாயக பிம்பத்தை முன்னிறுத்தி அதை நம்பவைக்கும் வலைப்பின்னல்களையும் திட்டமிட்டுக் கட்டமைக்கின் றனர். அதுவே இன்று பின்நவீனத்துவத்தின் அடுத்த கட்டமாக உண்மைகளுக்கும் மேலான உணர்வு நிலை யாக (Post-Truth) நம்முன் நிற்கிறது. புறநிலை உண்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தங்களின் உணர்ச்சிகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதையே உண்மை களுக்கு மேலான உணர்ச்சி ஆதாரமாகக் கொண்டுள்ளது. ‘உணர்ச்சிகள் உண்மைகளை மறைக்கின்றன’ என்றார் லெனின்.

அயற்சிகளுக்கு அப்பாற்பட்டது மார்க்சியம்

எந்த ஆதாரமும் இல்லாமல் பொய்ச் செய்திகளைப் பரப்பி ஒரு பிம்பத்தை உருவாக்குவது, அது பொய் என்று நிறுவி எதிர்த்தரப்பினர் ஆதாரங்களோடு சொல்லி முடிப்பதற்குள் அதுபோல் ஓராயிரம் பொய்களை அவர்களின் தொழில்நுட்ப மையம் சுற்றுக்கு விட்டிருக்கும். நவீனத் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு உண்மைபோல் பொய்யைப் பரப்புவது, அதைச் சம்பந்தப்பட்ட கட்சியின் - அமைப்பின் அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லாமல் போலியான கணக்குகளில் பதிவிட்டு ஓர் இணை யக் கூட்டத்தை உருவாக்கி, பெரும் பணத்தைச் செலவழித்து அதைப் பரப்புவது போன்ற செயல்கள் நடக்கின்றன. குறிப்பிட்ட கட்டமைப்பின் அடிப்படையில் தேடித்தேடி மக்கள் மத்தியில் இவை கொண்டு சேர்க்கப்படுகின்றன. இந்த முதலீடு பெரும் வெற்றியாகக் கையில் கிடைக்கிறது. சித்தாந்த ரீதியான, கொள்கை சார்ந்த,

ஆக்கப்பூர்வமான விவாதங்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டுப் பொய்ச் செய்திகளுக்குப் பின்னால் அலைய விடுவதும், அதையே நடைமுறையாக மாற்றும் தந்தி ரமும் அதில் உள்ளது. பொய்கள் உண்மைகளை விடக் கூடுதலான வலிமையோடு குரல் எழுப்பி வரு கின்றன. எப்போதும்போல் அதற்கு ஆளும் வர்க்கத்தின் பண பலமும் அதிகார பலமும் துணை நிற்கின்றன. எதார்த்தம் நமது எதிர்பார்ப்புகளுக்கு நேர் எதிராக உருவெடுக்கக்கூடும். நமது அகநிலை வாத சிந்தனையின் காரணமாகப் புறநிலை எதார்த்தங் களைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் நமது விருப்பங் கள் மட்டும் நிறைவேற வேண்டும் என்பதும் எதார்த்தத் திற்குப் புறம்பானதுதானே. மோசமான வளர்ச்சிப் போக்குகள் நமக்கு அயற்சியையும் ஏற்படுத்திவிடுகின்றன.

ஆனால், மார்க்சியம் அயற்சிகளுக்கு அப்பாற்பட்ட தாக உள்ளது. ‘இந்தப் பெருந்தோல்விதான் புரட்சி கர கட்சிகளுக்கும் புரட்சிகர வர்க்கத்திற்கும் மிகவும் பயனுள்ள மெய்யான பாடம் கற்பித்தது. தோல்வி யுற்ற படைகள் நன்கு படிப்பினை பெறுகின்றன’ என்கிறார் லெனின். இந்தக் கள எதார்த்தங்கள் நமக்கு படிப்பினைகளை மட்டுமல்ல, பாதைகளையும் காட்டு கின்றன. எதுவும் முடிந்துவிடவில்லை, இப்போது முடி வானதாகச் சொல்லப்படும் இன்றைய நிலைகூடத் தற்காலிகமானதே; அதுவும் மாற்றத்திற்கு உட்பட்டதே என்கிறது மார்க்சியம். ஆற்றல்மிக்க அறிவும், எதன் பொருட்டும் உடைந்துபோகாத வலிமையும் மார்க்சுக்கு உரியவை மட்டுமல்ல; மார்க்சியர்கள் அனைவருக்கும் உரியவையாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.