பயறு வகைகளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி
2 Jun 2026, 8:55 pm
<p><strong>பயறு வகைகளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி</strong></p><p>நாகர்கோவில், ஜுன் 2- மேல்புறம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான உள்மாவட்ட பயிற்சி ‘பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை“ என்ற தலைப்பில் சிதறால் கிராமத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் கிராமத்தில் நடந்த பயிற்சி முகாமுக்கு திருவட்டார் வேளாண்மை உதவி இயக்குநர் ஆ.ஷோபா தலைமை வகித்தார். பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் ராஜ் பிரவீன், இயற்கை வேளாண்மை குறித்தும் பயறு வகைப் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையின் முக்கிய காரணிகள் மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார். வேளாண் அறிவியல் நிலையம் உதவி பேராசிரியர் என்.ஷாஜி பயறு வகைப் பயிர்களின் சமீபத்திய இரகங்களும் அவற்றின் சிறப்பியல்புகள் மற்றும் உற்பத்தியை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தார். துணை வேளாண்மை அலுவலர் முத்து, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சஜுலா பேசினர்.</p>
