தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொன்னேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்களை அமைக்க வேண்டும்

11 Jan 2026, 7:00 am
பொன்னேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்களை அமைக்க வேண்டும்
<p>திருவள்ளூர், ஜன.11- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதி மன்றங்களில் வழக்கறி ஞர்களுக்கு சேம்பர் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட 5-வது மாநாடு சனிக்கிழமையன்று (ஜன 10), திரு வள்ளூரில் நடைபெற்றது. இதற்கு வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் இ.எழிலரசன், ஏ.ஸ்ரீதர் பாபு, என்.லெனின், கே.யக்ஞபிரபா,கே.சுதர்சனம், டி.சார்லஸ்கென்னடி ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில குழு உறுப்பினர் சி.கலைவாணி வரவேற்றார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.இளங்கோ துவக்கவுரை யாற்றினார். மாவட்ட செயலாளர் ஆர்.காள மேகம் வேலை அறிக்கையை சமர்ப்பித் தார். பாசிச பிடியிலிருந்து அரசமைப்பையும், நீதித்துறையையும் பாதுகாப்போம் என்ற தலைப்பில் தமுஎகச மாநில துணைத் தலைவர் ஆதவன் தீட்சண்யா கருத்துரை வழங்கினார். வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார் மாநாட்டில் நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் கே.சுதாகர் நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு சங்கத்தின் மாவட்ட தலைவராக இ.எழில ரசன், செயலாளராக ஆர்.காளமேகம், பொரு ளாளராக ஜி.சூரியபிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ஆகிய ஒருங்கிணைந்த &nbsp;நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு சேம்பர் மற்றும் உணவ கம் திறக்க &nbsp;வேண்டும், இளம் வழக்கறிஞர் களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு பிற மாநி லங்களைப்போல் உதவித்தொகை மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள காலிப்பணியி டங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டையில் டிஎம்சி மற்றும் ஜேஎம் நீதிமன்றத்திற்கு சொந்தமான நீதிமன்றக் கட்டடங்கள் அமைக்க வேண்டும், திருவள்ளுர், பொன்னேரி, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்ற வளாகங்க ளில் பெண்களுக்கு தனி ஓய்வு அறை, கழிவறைகளை அமைத்து தரவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.