தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நவீன தாராளமயம் உருவாக்கியுள்ள ‘சமூகத் துண்டிப்பை’ முறியடித்து தொழிற்சங்கங்கள் மக்களுடன் இணைய வேண்டும்!

29 Sept 2026, 9:44 pm
நவீன தாராளமயம் உருவாக்கியுள்ள ‘சமூகத் துண்டிப்பை’ முறியடித்து  தொழிற்சங்கங்கள் மக்களுடன் இணைய வேண்டும்!

நவீன தாராளமயம் உருவாக்கியுள்ள ‘சமூகத் துண்டிப்பை’ முறியடித்து தொழிற்சங்கங்கள் மக்களுடன் இணைய வேண்டும்!

சென்னை, செப்.29 -காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னைக் கோட்டம் 2-இன் 33 ஆவது மாநாடு, தலைவர் கே.மனோகரன் தலைமையில் சென்னை வேப்பேரியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.26, 27) நடைபெற்றது.

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், “1993-இல் அமைக்கப்பட்ட மல்ஹோத்ரா குழு 1994 தொடக்கத்தில் அளித்த பரிந்துரைகள் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் எல்.ஐ.சி-யையும் அழிக்கும் வகையில் அமைந்தன. கிளைகள் மூடப்படும் அபாயம் மற்றும் பணி ஓய்வு குறித்த அச்சங்களுக்கு இடையே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், 1990-களில் பணியில் சேர்ந்த இளம் ஊழியர்களும் நடத்திய தீவிர போராட்டமே நிறுவனங்களைப் பாதுகாத்தது.

மெட்ரோபாலிட்டன் இன்சூரன்ஸ் ஊழியர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்திருந்தால் வேலைக்கு வந்திருக்கலாம்.பட்டினியும், குடும்ப உறுப்பினர்கள் இழப்புகளையும் தவிர்த்திருக்கலாம். ஆனால், சங்கத்தின் கொடிக்காகவும், சங்கத்தின் எதிர்காலத்திற்காகவும் உறுதியாக நின்று சாதனை படைத்தனர்.மேலும், 1975 எமர்ஜென்சி காலத்தில் வாயிற்கூட்டங்கள் தடை செய்யப்பட்டு, தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்ட போதும் சங்கம் சமரசமின்றி இயங்கியது. ‘போனஸ்’ என்பது தொழிலாளர்களின் சொத்துரிமை என வாதாடி பெற்ற வெற்றியையும், “இப்போராட்டம் சட்டபூர்வமானது மட்டுமல்ல, நியாயமானது” என உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பையும் நினைவு கூர்ந்தார்.

காங்கிரஸ் நிலைப்பாடு

1999-இல் பாஜக கொண்டு வந்த மசோதாவை சோனியா காந்தி, மாதவராவ் சிந்தியா ஆகியோர் எதிர்ப்பதாகக் கூறிய போதிலும், எம்.பி. முரளி தியராவின் கார்ப்பரேட் நிதி தொடர்பான வாதத்தால் காங்கிரஸ் அதை ஆதரிக்கும் நிலைக்கு வந்தது. 2000 ஆம் ஆண்டு புத்தாண்டு வெள்ளை மாளிகை விருந்தில் முரளி தியோரா “இந்திய இன்சூரன்ஸ் சீர்திருத்தங்களின் சிற்பி” என அறிமுகப் படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், நாம் எதிர்கொள்ளும் எதிரிகள் சாதாரணமானவர்கள் அல்ல என்றார்.

அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கம்

எல்.ஐ.சி-க்கு வழங்கப்படும் அரசு உத்தரவாதத்தை திரும்பப் பெற அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சபை நிர்பந்திப்பதாக அவர் எச்சரித்தார். இந்தியாவில் 88% வணிகத்தைக் கட்டுப்படுத்தும் ஜி-பே (33%) மற்றும் போன்-பே (55%) போன்ற அமெரிக்க நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்த முற்படுவதன் பின்னணியிலும் இந்த அமெரிக்க அமைப்பே உள்ளது.கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படுவதை அவர் கடுமையாக விமர்சித்தார். சாமானிய மக்களுக்கு தரும் மானியம் சோம்பேறித்தனத்தை உருவாக்கும் என உபதேசிக்கும் அரசு, போன்-பே, ஜி-பே நிறுவனங்களுக்கு கட்டணங்கள் போதாவிட்டால் மானியம் வழங்கப்படும் எனக் கூறுவது ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிவதையே காட்டுகிறது.

ஓய்வூதிய தாக்குதல்

நவீன தாராளமய பொருளாதாரம் ஓய்வூதிய முறையை சர்வதேச நிதிச் சூதாட்டத்திற்காகக் குறிவைக்கிறது. போராட்டங்களை முடக்க ஒன்றிய அரசுவெறுப்பு அரசியலை பயன்படுத்தி தொழிலாளர்களை மதம் மற்றும் சாதி ரீதியாக பிரிக்க முயல்கிறது. மத நம்பிக்கை வேறு, மதவெறி வேறு என்பதை ஊழியர்களிடமும் பொதுமக்களிடமும் தெளிவுபடுத்த வேண்டும். நவீன தாராளமயம் உருவாக்கியுள்ள ‘சமூகத்துண்டிப்பை’ முறியடித்து, தொழிற்சங்கங்கள் சமூகத்தோடு தங்களை ஆழமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.