அந்நிய நேரடி முதலீட்டை வாபஸ் பெறக்கோரி இன்சூரன்ஸ் ஊழியர்கள் போராட்டம்
21 Dec 2025, 3:21 pm
<p><strong>அந்நிய நேரடி முதலீட்டை வாபஸ் பெறக்கோரி இன்சூரன்ஸ் ஊழியர்கள் போராட்டம்</strong></p>
<p>திருவாரூர், டிச.21- இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பினை 74 சதவீதத்தில் இருந்து நூறு சதவீதமாக உயர்த்துவதற்கான சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சரால் தாக்கல் செய்துள்ளதை வாபஸ் பெறக் கோரி, திருவாரூர் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை கோட்ட சங்கத்தின் துணைத் தலைவர் செந்தில் குமார் தலைமை ஏற்று கோரிக்கையை விளக்கி உரையாற்றினார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் காளிமுத்து, எல்ஐசி முதல்நிலை அதிகாரிகள் சார்பாக ரமேஷ், திருவாரூர் கிளைச் செயலாளர் சந்தோஷ், லிகாய் முகவர் சங்கம் சார்பாக பாலு, ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்கள், பாலிசி தாரர்கள், தோழமை தொழிற் சங்கத்தினர் சுமார் நூறு பேர் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். கிளை தலைவர் குமார் நன்றி கூறினார்.</p>
