தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காப்பீட்டு துறையில் 100 விழுக்காடு அந்நிய முதலீட்டை திரும்பப் பெற வேண்டும்ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

2 hours before
காப்பீட்டு துறையில் 100 விழுக்காடு அந்நிய முதலீட்டை திரும்பப் பெற வேண்டும்ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

காப்பீட்டு துறையில் 100 விழுக்காடு அந்நிய முதலீட்டை திரும்பப் பெற வேண்டும்ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

திருவண்ணாமலை, செப்20-காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்ட 39 வது மாநாடு திருவண்ணாமலையில் செப்.19, 20 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. ஞாயிறு அன்று நடைபெற்ற மாநாட்டில் மார்க்சிஸ்ட் இதழ் ஆசிரியர் குழுவை சேர்ந்த இரா.சிந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:பொதுத்துறை நிறுவனங்களில் பணி பாதுகாப்புடன் இருக்கும் ஊழியர்களுக்கு, இளைய தலைமுறையினரால்ஆபத்து ஏற்படும் சூழலை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்படுத்தி வருகின்றன.மேலும், பருவநிலை மாற்றத்தால் இந்தசமூகம் நெருக்கடி நிலையை சந்திக்கும் ஆபத்து ஏற்படுகிறது. ஆனால், பருவநிலை மாற்றம் குறித்தும், அரசியல்குறித்தும் ஆட்சியாளர்கள் பேசாமல் உள்ளனர் என்றார்.தொடர்ந்து, பிரதிநிதிகள் விவாதத்தை அடுத்து, வேலூர் கோட்ட பொதுச் செயலாளர் எஸ். பழனிராஜ் தொகுப்புரை வழங்கினார்.

தீர்மானங்கள்

இந்த மாநாட்டில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். நான்கு பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றிணைக்க வேண்டும். இன்சூரன்ஸ் துறையில்100 விழுக்காடு அந்நிய முதலீட்டை திரும்பப்பெற வேண்டும்.விவசாயப் பொருட்களுக்கான நியாயமான விலையை நிர்ணயம் செய்யக் வேண்டும். கல்வியை எட்டாக் கனியாக்கி, சாமான்ய மக்களைபுறந்தள்ளியும், கல்வியை வியாபாரம் ஆக்கும் புதிய கல்விகொள்கையை கைவிட வேண்டும்.சாதி ஆணவப் படுகொலை, தீண்டாமை மற்றும் சாதியப் பாகுபாடுகள் போன்றவைகளைத் தடுக்க சட்டங்கள் மூலம் கடுந்்தண்டனை வழங்க வேண்டும்,குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் தேர்வு

தலைவராக பி.எஸ்.பாலாஜி, பொதுச் செயலாளராக எஸ். இரமேஷ்பாபு, பொருளாளராக சி.கணேசன் ஆகியோர்தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக பி. கங்காதேவி நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.