முந்தய பக்கம்

இன்சூரன்ஸ் ஊழியர் சங்க அமைப்பு தினம்

2 Jul 2026, 2:05 am
இன்சூரன்ஸ் ஊழியர் சங்க அமைப்பு தினம்
<p><strong>இன்சூரன்ஸ் ஊழியர் சங்க அமைப்பு தினம்</strong></p><p>கோவை, ஜூலை 1- அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க 76 ஆவது அமைப்பு தின விழா கோவையில் எழுச்சிகரமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழி யர் சங்க 76 ஆவது அமைப்பு தின விழா புதனன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்ஒருபகுதியாக கோவை - திருச்சி சாலையில் உள்ள அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கோட்டத் தலைவர் பி.வி.குமார் சங்க கொடியை ஏற்றி வைத்தார். இதில், அகில இந்திய இணைச் செயலா ளர் எம்.கிரிஜா, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் வி.சுரேஷ் சிறப்புரையாற்றினர். கோட்டச் செயலாளர் கே.துளசிதரன், பொருளாளர் பி.சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக கோட்ட இணைச் செயலாளர் ஜி. சுதா உறுதிமொழி வாசிக்க நூற்றுக்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ஊழி யர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram