கட்சிப் பணியும் சங்க வேலையும் கண்ணெனக் கொண்ட காப்பீட்டு ஊழியர் - ஜி.ராமகிருஷ்ணன்
2 Dec 2025, 4:11 pm

கட்சிப் பணியும் சங்க வேலையும் கண்ணெனக் கொண்ட காப்பீட்டு ஊழியர்

பொதுத்துறை நிறுவனத் தில் பணியாற்றிய நாட் களிலும் பணி ஓய்வு பெற்ற பிறகும் இயக்கச் செயல்பாடுகளில் ஈடு பட்டு வரும் ‘களப்பணி யில் கம்யூனிஸ்ட்டுகள்’ பலரையும் இத்தொட ரில் சந்தித்திருக்கிறோம். இப்போது தம் அனு பவங்களை நம்மோடு பகிர்கிறவர் “வி.டி.எஸ்.” என்றழைக்கப்படும் தோழர் வி.டி. சோமசுந்தரம். 1941ஆம் ஆண்டு வேலூர் நகரத்தில் ஒரு நடுத்தர வர்க்க ஊழியர் குடும்பத்தில் பிறந்தவர் சோமசுந்தரம். தந்தை பொதுப் பணித்துறையில் மேலாளராகப் பணியாற்றியவர். தாத்தா அரசு ஊழியராக இருந்தவர். 1940களில் அரசுப் பணியி லிருந்த குடும்பம் என்ற நிலையில், தங்கள் பிள்ளை களின் கல்வி, வேலை வாய்ப்பு பற்றிய புரிதலோடு இருந்தார்கள். வேலையில் இணைந்ததும் சங்க ஈடுபாடு தந்தை சென்னையில் பணியாற்றியபோது சோமசுந்தரம் சென்னை நகரில் பள்ளிக் கல்வி முடித்து புதுக் கல்லூரியில் சேர்ந்து கணிதத்தில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றார்.

1965இல் ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுவனத்தில் ஊழியராகச் சேர்ந்தார். அதே ஆண்டில் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இணைந்தார். பணி நிரந்தரமானதிலிருந்து 2001இல் ஓய்வு பெறுகிற வரையில், அந்நாளில் நாட்டின் மிக உயரமான கட்டடங்களில் ஒன்றாக விளங்கிய சென்னை அண்ணா சாலையில் (அன்று மவுண்ட் ரோடு) உள்ள 14 மாடி கட்டடத்தில் இயங்கும் எல்ஐசி அலுவலகத்தில் பணியாற்றியதைப் பெருமை யாகக் குறிப்பிடுகிறார். அன்றைய ஒன்றிய அரசு மும்பையிலும் கல்கத்தாவிலும் எல்ஐசி அலுவலகங்களில் மிகுதிறன் கணினிகளை (சூப்பர் கம்ப்யூட்டர்) புகுத்த முயன்றது. அதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த இரண்டு பெரு நகரங்களில் உள்ள எல்ஐசி அலுவலகங்களில் மிகுதிறன் கணினியை நிறுவுவது புதிய வேலைவாய்ப்புகளைப் பாதிக்கும் என்பதால் ஊழியர்கள் உணர்வுப்பூர்வமான ஆவேசத்துடன் போராட்டத்தில் பங்கேற்றனர். கல்கத்தா போராட்டத்தின்போது தோழர் ஜோதிபாசு நேரடியாகச் சென்று கலந்து கொண்டிருக்கிறார்.

ஊழியர்களின் உறுதியான எதிர்ப்பால் அரசு கணினியைப் புகுத்துவதிலிருந்து பின்வாங்கியது. கப்பலில் கொண்டு வரப்பட்ட கணினிகள் திருப்பி அனுப்பப்பட்டன. கணினி எதிர்ப்பின் பலன் அக்காலத்தில் நிறுவனத்தின் சென்னை மண்டலம் என்பது வேலூர், புதுச்சேரி, வடஆற் காடு, தென்னாற்காடு, நெல்லூர், திருப்பதி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. ‘சூப்பர் கம்ப்யூட்டர்’ நுழைப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் (ஏஐஐஇயு) தலைவராக சந்திரசேகர போஸ், பொதுச்செயலாளராக சரோஜ் சவுத்திரி இரு வரும் பொறுப்பில் இருந்தனர். கம்ப்யூட்டர் புகுத்தும் முடிவைக் கைவிட்டதைத் தொடர்ந்து நிர்வாகம் புதிய ஊழியர்களை வேலைக்கு எடுத்தது. இத்தகைய வேலைவாய்ப்புகள் பறிக்கப்படக் கூடாது என்பதற் காகத்தான் சங்கம் கம்ப்யூட்டர் புகுத்தலை அன்று எதிர்த்து நின்றது என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது. 1968ஆம் ஆண்டு தோழர் ராஜப்பா (‘களப்பணி யில் கம்யூனிஸ்ட்டுகள்’ தொடரில் அவரைச் சந்தித்தி ருக்கிறோம்) சென்னை மண்டல பொதுச்செயலாள ராகத் தேர்வு செய்யப்பட்டார். 1975ஆம் ஆண்டு மத்திய அரசு அவசர நிலை ஆட்சியை அறிவித்தது. போனஸ் சட்டம் திருத்தப்பட்டு காப்பீட்டுத்துறை ஊழியர்களுக்கான போனஸ் ரத்து செய்யப்பட்டது.

அந்த முடிவை எதிர்த்து எல்ஐசி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக 1973இல் எல்ஐசி நிர்வாகத்திற்கும், தொழிற்சங்கத்திற்கும் இடையில் ஊதியப் பேச்சுவார்த்தை நடந்தது. பல மாதங்களாகியும் ஒரு முடிவை எட்டாமல் பேச்சுவார்த்தையை நிர்வாகம் முறித்தது. நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை கண்டித்து சங்கத் தலைமையின் அறைகூவலை ஏற்று அகில இந்திய அளவில் “விதிப்படி வேலை” என்ற போராட்டம் நடைபெற்றது. சங்கத்தைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதை விட்டுவிட்டு, நிர்வாகம் டெல்லி, சென்னை, பெங்களூர், பாட்னா, தார்வா ஆகிய நகரங்களில் அலுவலகங்களுக்குக் கதவடைப்பை அறிவித்தது. சென்னையில் மாநில அரசு 144 தடைச் சட்டத்தை பிறப்பித்தது. அகில இந்திய அளவில் பல தலைவர்களை நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. பலருக்கு விளக்கம் கோரும் ஆணையை அளித்தது. நம்பிக்கைப் பேச்சு சவால் மிக்க அந்நேரத்தில் சென்னையில் ஊழியர்களை ஒவ்வொருவராகச் சந்தித்து உரை யாடி, நம்பிக்கையூட்டி, நிர்வாகத்தின் அடக்குமுறை களை மனம் கலங்காமல் எதிர்கொள்ள வைத்த தில் தோழர் வி.டி.எஸ். பங்கு மகத்தானது. ஒடுக்கு முறையால் ஒடுங்கிவிடாமல் ஊழியர்கள் உறுதி யாகப் போராடியதால் நிர்வாகம் வேறுவழியின்றி பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. ஊதிய உயர்வு, போனஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. தோழர் வி.டி. சோமசுந்தரம் 1974இல் எல்ஐசி கதவடைப்பை சங்கம் எதிர்கொண்டதையும், அதில் ஊழியர்களை உறுதியோடு நிற்க வைத்ததில் தானும் அன்றைய தலைமையும் ஆற்றிய பங்கை பகிர்ந்து கொள்வது தொழிற்சங்க இயக்கத்தின் இன்றைய முன்னணி ஊழியர்களுக்குக் கிட்டுகிற மகத்தானதொரு வரலாற்று அனுபவம்.

1975ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்தார். எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தச் சட்டத்தின் மூலம் போனஸ் சட்டம் திருத்தப்பட்டு, அனைத்துத் துறைகளின் தொழிலாளர்கள், ஊழி யர்களுடைய போனஸ் உரிமை பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து எல்ஐசி ஊழியர்கள் மேற்கொண்ட களப் போராட்டமும், சட்டப் போராட்டமும் வெற்றிகரமாக முடிவடைந்தது தனி வரலாறு. பி.டி.ஆர். பாய்ச்சிய வெளிச்சம் 1986ஆம் ஆண்டு நிறுவனம் “மைக்ரோ ப்ராசஸ்சர்” முறையை அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து 1993இல் கணினியைக் கொண்டு வர நிறுவனம் முடிவெடுத்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரச்சனை குறித்து சிஐடியு அகில இந்திய தலைவர் தோழர் பி.டி. ரணதிவே அவர்களை அணுகி விவாதித்த போது, அவர் கூறிய ஆலோசனை முக்கியமானது. “மிகுதியான எந்திரமயமாக்கல் வேலைகளைக் கொன்றுவிடும். போதாமையான எந்திரமய மாக்கல் தொழிலையே கொன்றுவிடும். (“Over Mechanisation will kill the jobs and under machanisation will kill the industry”) நிறு வனத்தின் தேவைக்கேற்ப கணினிப் பயன்பாடு தேவைதான், அதே வேளையில் அனாவசியமாகக் கணினியைப் புகுத்த அனுமதிக்கக் கூடாது.

இது குறித்து சங்கம் நிர்வாகத்தோடு பேச்சு நடத்தி சுமூக முடிவு காணலாம்,” என்று பி.டி.ஆர். கூறி யிருக்கிறார். அதன் அடிப்படையில்தான் பேச்சு வார்த்தை நடந்து ஒப்பந்தம் ஏற்பட்டது. 1988இல் சென்னை எல்ஐசி அலுவலகத்தில் பணியாற்றி வந்த தோழர் என்.எம். சுந்தரம் அகில இந்திய பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப் பட்டார். இப்பொறுப்பில் அவர் 16 ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார். முன்னதாக தென்மண்டல பொதுச் செயலாளராக 25 ஆண்டுகள் பொறுப்பில் இருந்திருக்கிறார். எல்ஐசி ஊழியர் சங்கத்தை பொறுத்தவரையில் பொதுச் செயலாளர் பணியில் உள்ள மாநிலத்தில்தான் சங்கத்தினுடைய தலைமை அலுவலகம் இயங்கும். இந்த அடிப்படை யில் 16 ஆண்டுகள் சென்னையிலிருந்து பொதுச் செயலாளராக தோழர் என்.எம்.எஸ். செயல்பட்டி ருக்கிறார். சங்கத்தின் அகில இந்திய தலைமை சென்னையிலிருந்து செயல்பட்டபோது அலுவல கப் பணி மற்றும் அகில இந்திய மைய வேலைகளை கவனிக்கக் கூடிய அடிப்படையில் மாநில தலை வர்கள் உதவி செய்தார்கள்.

1996ஆம் ஆண்டு தோழர் வி.டி. சோமசுந்த ரம் சங்கத்தினுடைய மண்டல இணைச் செயலாள ராகத் தேர்வாகிப் பல ஆண்டுகள் அப்பொறுப்பில் செயல்பட்டிருக்கிறார். சங்கத் தலைமை போராட்டத் திற்கு அறைகூவல் விடுக்கிற போதெல்லாம் ஊழியர்களை அதில் பங்கேற்க வைப்பதில் வி.டி.எஸ். முன்னணிப் பங்கு வகித்திருக்கிறார். பெண்களின் பங்கேற்பிற்காக வேலை நிறுத்தம் நடைபெறுகிறபோது அதில் பெண் ஊழியர்கள் உள்ளிட்டு அனைத்து ஊழியர் களையும் பங்கேற்க வைப்பதற்காக ஊழியர்களை வீடுகளுக்கு சென்றும் நிர்வாகிகள் சந்திப்பார்கள். குறிப்பாக, பெண் ஊழியர்களை வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அவர்களுடைய குடும்பத்தில் இருக்கிறவர்கள் கூறுவார்கள். இப்பின்னணியில் சம்பந்தப்பட்ட ஊழியர்களை மட்டுமல்லாமல் ஊழியர்களுடைய குடும்பத்தினரையும் சந்தித்து போராட்டத்தின் அவசியத்தை உரையாடி அவர்களை பங்கேற்க வைப்பதில் மற்ற தோழர்களோடு சேர்ந்து வி.டி. சோமசுந்தரம் முனைப்பாகச் செயல்பட்டிருக்கிறார். சென்னை அண்ணா சாலையில் உள்ள 14 மாடி எல்ஐசி அலுவலகத்தில்தான் தோழர் என்.எம்.சுந்தரம் செயல்பட்டு வந்தார். அவர் சங்கப் பணிகளுக்காக வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டியிருந்த நேரங்களில் சென்னை அலு வலகத்தில் சங்கப் பணிகளை மற்ற தோழர்களோடு சேர்ந்து தொய்வின்றி முன்னெடுத்துச் சென்றார் வி.டி.எஸ். இவரைப் போன்ற தோழர்கள் அக்காலத் தில் சங்கப்

பணிகளையும் கட்சிப் பணிகளையும் உறுதியோடு மேற்கொண்ட காரணத்தினால்தான் இப்போதும் இந்தச் சங்கம் நாடு தழுவிய அளவில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கட்சியில் இணைந்தார் “1975இல் நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானேன். நான் கட்சியில் சேர்வதற்குத் தூண்டுகோலாய் இருந்தவர் தோழர் கே.என்.ஜி. (கே.என். கோபாலகிருஷ்ணன்),” என்று நெகிழ்வோடு குறிப்பிட்டார். சென்னை மாவட்டத்தில் காப்பீட்டு ஊழியர் அரங்கத்தில் கட்சியைக் கட்டும் பணியைச் செய்ததில் முக்கியப் பங்கு அவரைச் சாரும் என்றார். மேலும், சென்னை நகரத்தில் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங் களையும் மத்திய அரசு, மாநில அரசு ஊழியர் அமைப்புகளையும் இணைத்து சென்னை தொழிற் சங்க கூட்டமைப்பு உருவாக்கியதில் கே.என்.ஜி. போன்ற தோழர்களுக்கு முக்கியப் பங்கு இருந்தது. தோழர் வி.டி.எஸ். சில ஆண்டுகள் கட்சியின் கிளைச் செயலாளராகச் செயல்பட்டிருக்கிறார். கட்சியின் ஆயுள் காப்பீட்டுக் கழகம் / பொதுக் காப்பீட்டிக் கழகம் (எல்ஐசி / ஜிஐசி) இரண்டும் இணைந்த அரங்க இடைக்குழுவிற்கு செயலாள ராக 6 ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார். கிளைச் செயலாளராகவும், இடைக்குழு செயலாளராகவும் இருந்தபோது கட்சி உறுப்பினர்களுக்கு ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’, ‘தீக்கதிர்’ ஏடுகளின் விநியோகத்தைத் தானே செய்ததை வி.டி.எஸ். பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

இவருக்கு 1976ஆம் ஆண்டு திருமணம் ஆனது. மகன், மகள் இருவரும் பொறியாளர் பட்டம் பெற்று பணியில் உள்ளனர். இணையரும், பிள்ளைகளும் இவரது கட்சிப் பணி களுக்கும் சங்க வேலைகளுக்கும் துணையாக உதவிகரமாக இருந்து வந்திருக்கிறார்கள். மாணவர்களை மீட்க சொத்துப் பத்திரம் “1974இல் மாநிலம் முழுவதும் அரிசி, மண் ணெண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டு பெரிய வியாபாரிகள் அவற்றைப் பதுக்கி வைத்துக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். அதை எதிர்த்து கட்சியின் மாநிலக்குழு போராட்டத்திற்கு அறை கூவல் விடுத்தது. அந்தப் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஈடுபட்ட தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரி மாணவர்களும், மாணவர் சங்கத் தலைவர்களான என். ராம் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டார்கள்.

சென்னை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்கள். 15 நாட்களுக்குப் பிறகு மாணவர் சங்க தலைவர்கள் 7 பேரை பிணை யில் விடுவிப்பதற்கு தானும் வேறு சில எல்ஐசி தோழர்களும் எங்களுடைய சொத்துப் பத்திரங் களைக் கொடுத்ததை நெகிழ்வோடு கூறினார். இவ்வாறு சென்னையில் கட்சியும், சிஐடியு சங்கமும் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றுச் சிறையில் அடைக்கப்பட்ட பல தோழர்களை பிணையில் எடுப்பதற்கு காப்பீட்டு ஊழியர் சங்கத் தோழர்கள் சொத்துச் சான்றிதழ்கள் அளித்து உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. பணியிலிருந்து ஓய்வுபெற்ற தோழர் வி.டி.எஸ். தொடர்ந்து கட்சி உறுப்பினராகச் செயல்பட்டு வருவதோடு, காப்பீட்டுத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் அங்கமாகவும் உள்ளார். தற்போது 84 வயதாகும் தோழர் சோமசுந்தரம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிவரும் இயக்கப் பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.