காலமானார்
25 Nov 2025, 3:29 pm
<p><strong>காலமானார்</strong></p>
<p>கடலூர், நவ.25- காப்பீட்டு கழக ஊழியர் சங்க வேலூர் கோட்ட சங்கத்தின் துணைத் தலைவரும், எல்ஐசி கடலூர் கிளை சங்க செயலாளருமான வைத்திலிங்கம் தாயார் தனலட்சுமி (வயது 92) திங்கட்கிழமையன்று (நவ.24) காலமானார். தனலட்சுமிஅம்மையார் உடலுக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பராயன், ஜே.ராஜேஷ்கண்ணன், கடலூர் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கீரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்ட துணைத் தலைவர் குணா, இணைச் செயலாளர் வேலாயுதம், கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.வெங்கடேசன், சிறப்பு தலைவர் எம்.மருதவாணன் உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அவருடைய இறுதி ஊர்வலமும் நல்லடக்கமும் செவ்வாயன்று கம்மியம்பேட்டை இடுகாட்டில் நடைபெற்றது.</p>
