தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

3 Feb 2026, 4:00 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கட்டப்பஞ்சாயத்தை தடுக்க அறிவுறுத்தல்

உதகை, பிப்.3- கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி அத்து மீறல்களை தடுக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் அறி வுறுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம்  ஒழுங்கு மற்றும் சாலைப்பாதுகாப்பு தொடர் பான ஆய்வுக் கூட்டம் செவ்வாயன்று நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். மாவட்ட  எஸ்.பி. நிஷா முன்னிலை வகித்தார். இக் கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி,  தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும். வெளி மாநில மதுபானங் கள் விற்பனை செய்வது தடுப்பது போன்ற வைகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகை யிலைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலும்  கட்டுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட் டது. விபத்துக்களை குறைக்கும் வகையில்,  எடுக்க வேண்டிய சாலைப்பாதுகாப்பு குறித் தும் விவாதிக்கப்பட்டது. பழங்குடியின கிரா மங்களில் பழங்குடியின மக்கள் வசிக்கக் கூடிய பகுதிகளுக்கு சென்று பிரச்சனைக ளுக்கு தீர்வு காண வேண்டும் என அறிவுறுத் தப்பட்டது. இதில், கூடுதல் எஸ்.பி.,  ஆர்.டி.ஓ.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், வரு வாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் பங்கேற்றனர்.

துருப்பிடித்த குழாய்களை மாற்றி தரக்கோரி மனு

உதகை, பிப்.3- பாலகொலா, மகாலிங்க நகர் பகுதியில் துருப்பிடித்த குடி நீர் குழாயை மாற்றி தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி  பொதுமக்கள் 2 ஆவது முறையாக ஆட்சியரிடம் மனு அளித்த னர். நீலகிரி மாவட்டம், உதகை ஆட்சியர் அலுவலத்தில் திங்க ளன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில்  உதகையை அடுத்த பாலகொலா, மகாலிங்க நகர் பகுதி  மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், பாலாகொலா  ஊராட்சி, ஒன்றாவது வார்டுக்குட்பட்ட மகாலிங்க நகர்  பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். எங்கள் பகுதிக்கு கடந்த ஒரு வருட காலமாக குடிநீர்  சரிவர கிடைப்பதில்லை. கிணற்றிலிருந்து குடிநீர் தேக்கத் தொட்டி வரையுள்ள குழாய் மிகவும் பழுதடைந்துள்ளதாலும், துரு மற்றும் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் தேக்கத்தொட்டிக்கு தண்ணீர் வருவதில்லை. இதனை சரி செய்து தருமாறு பல முறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.  இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் தங்களை (ஆட்சியரை) சந்தித்து மனு அளித்தோம். ஆனால், எவ்வித  நடவடிக்கையும் இல்லை. இதனால் போதிய தண்ணீர் கிடைக் காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே, குடிநீர்  குழாயை மாற்ற நடவடிக்கை எடுத்து குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

துருப்பிடித்த குழாய்களை மாற்றி தரக்கோரி மனு

உதகை, பிப்.3- மகாலிங்க நகர் பகுதியில் துருப்பிடித்த குடிநீர் குழாயை  மாற்றித் தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், உதகை ஆட்சியர் அலுவலத்தில் திங்க ளன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில்  உதகையை அடுத்த பாலகொலா, மகாலிங்க நகர் பகுதி  மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், பாலாகொலா  ஊராட்சி, ஒன்றாவது வார்டுக்குட்பட்ட மகாலிங்க நகர்  பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். எங்கள் பகுதிக்கு கடந்த ஒரு வருட காலமாக குடிநீர்  சரிவர கிடைப்பதில்லை. கிணற்றிலிருந்து குடிநீர் தேக்கத் தொட்டி வரையுள்ள குழாய் மிகவும் பழுதடைந்துள்ளதாலும், துரு மற்றும் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் தேக்கத்தொட்டிக்கு தண்ணீர் வருவதில்லை. இதனை சரி செய்து தருமாறு பல முறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.  இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் தங்களை (ஆட்சியரை) சந்தித்து மனு அளித்தோம். ஆனால், எவ்வித  நடவடிக்கையும் இல்லை. இதனால் போதிய தண்ணீர் கிடைக் காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே, குடிநீர்  குழாயை மாற்ற நடவடிக்கை எடுத்து குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை

உடுமலை,பிப்.3- மின்சார வாரியம் விவசாய பயன்பாட் டிற்கு மின் இணைப்பு வழங்கப்படுவதில் ஏற் கனவே மின் இணைப்பு இல்லாத விவசாயி களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என் விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவிப்பின்படி மின் இணைப்பு கள் தரப்பட்டு வருகிறது. மேலும் விவசாயி கள் மின்வாரிய அலுவலகத்தில் மின்  இணைப்பு கோரி மனு தாக்கல் செய்துவரு கின்றனர். இந்நிலையில் மின்வாரிய அதிகாரி கள் விவசாயிகளின் நிலையை அறியாமல் அனைத்து தரப்பு விவசாயிகளிடம் இருந்து  மனு பெற்று மின் இணைப்பு வழங்குகிறார் கள். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மின்வாரியத்தின் சார்பில் ஒரு குறிப்பிட்ட நில  அளவின் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கபட்டு வருகிறது. இதனால் பணம் உள்ள விவசாயிகளுக்கு ஒன்றுக்கும் மேற் பட்ட மின் இணைப்புகள் கிடைக்கிறது. மேலும், தட்கல் திட்டத்தின் பணம் செலுத்தி யும் மின் இணைப்பை பெருகிறார்கள். ஆனால், இதுவரை இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் தந்துள்ள ஏழை விவசா யிகளுக்கு, மின் இணைப்புகளை மின்வாரி யம் தர வேண்டும். மேலும் சிறு குறு விவசாயி களுக்கு சுய நிதி திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றனர். குறைதீர்க்கும் கூட்டம் இதனிடையே, மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்  4 ஆம் தேதி  புதனன்று  உடுமலை செயற்பொறியாளர் அலுவலகத் தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உடு மலை கோட்டத்தின் மேற்பார்வை பொறியா ளர் கீதா தலைமையில் கூட்டத்தில் நடை பெறும். இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் மின் நுகர்வோர் தங்களுடைய குறைகளை தெரிவிக்கும் படி செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துவுள்ளார்.'

புகையிலைப் பொருட்கள் விற்பனை: 293 கடைகள் மூடல்

திருப்பூர், பிப்.3 – திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட்  முதல் ஜனவரி வரை ஆறு மாத காலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட் கள் விற்பனை செய்வது குறித்து 293 கடை கள் மூடி சீலிடப்பட்டன. ரூ.74 லட்சத்து 50  ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை  நியமன அலுவலர் செந்தில்குமார் செவ்வா யன்று விடுத்துள்ள செய்தியறிக்கை: திருப் பூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருட்கள் மற்றும் நிக்கோடின் கலந்த பொருட்கள் விற்பனை செய்வது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி  மாதம் வரை ஆறு மாத காலத்தில் 25 ஆயி ரத்து 409 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டன.  இதில் 293 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு பூட்டி சீலிடப்பட் டது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகளில் அபராதத் தொகையாக ரூ.74 லட்சத்து 50 ஆயி ரம் வசூலிக்கப்பட்டது என உணவுப் பாது காப்புத் துறை நியமன அலுவலர் செந்தில் குமார் கூறியிருக்கிறார்.

நிர்வாக குறைபாட்டிற்கு பொதுமக்களுக்கு அபராதம்?

உதகை, பிப். 3- நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நக ராட்சியில் நிலவிய நிர்வாக குளறுபடி களுக்காக பொதுமக்களிடம் அபராதம் வசூ லிப்பதை கைவிட வேண்டும் என கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாது காப்பு மையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த மையத்தின் செய லாளர் சிவசுப்பிரமணியம், நகராட்சி நிர்வாக  ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு  அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லியாளம் நகராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணியாற்றியவர் இட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, கடந்த  4 மாதங்களாக அந்தப் பணியிடம் காலி யாக இருந்தது. சமீபத்தில்தான் புதிய ஆய் வாளர் பணியில் சேர்ந்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில், தங்கள்  உறவினர்களின் இறப்பைப் பதிவு செய்ய  பொதுமக்கள் உரிய நேரத்தில் விண்ணப் பித்தனர். ஆனால், “ஆய்வாளர் இல்லாத தால் கணினியில் பதிவேற்ற முடியாது” எனக்  கூறி நகராட்சி ஊழியர்கள் விண்ணப்பங் களை பெற்று வைத்துக்கொண்டனர். தற்போது பணியிடம் நிரப்பப்பட்ட நிலை யில், காலதாமதத்தை காரணம் காட்டி இறந்தவர்களின் உறவினர்களிடம் தலா 200  ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது.  துப்புரவு ஆய்வாளர் இல்லாதது நக ராட்சி நிர்வாகத்தின் குறைபாடே தவிர, பொது மக்கள் செய்த தவறு அல்ல. உரிய காலத்தில்  விண்ணப்பித்தும், நிர்வாக தாமதத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அபராதம் வசூ லிப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள் ளது. எனவே, கடந்த 4 மாதங்களாக விண்ணப் பித்து காத்திருப்பவர்களுக்கு, அபராத மின்றி வழக்கம்போல இலவசமாக இறப்புச்  சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.3- பாப்பிரெட்டிபட்டி அருகே 80 வயது  மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை உடனடியாக காவல் துறையினர் கைது செய்ய வேண் டும் என மாதர் சங்கம் வலியுறுத்தியுள் ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டி பட்டி வட்டம் முள்ளிக் காடு கிராமம் பழங்குடியினத்தை சேர்ந்த 80 வயது  மூதாட்டி திங்களன்று மதியம் தோட்டத் தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்  அந்த மூதாட்டின் காதில் உள்ள நகையை பறித்து, பின்னர் அவரை அடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மயக்கமடைந்த நிலை யில் நிலத்தின் அருகே மயங்கி நிலை யில் இருந்த அவர், சில மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்து வீட்டிற்கு சென்று அவரது உறவினரிடம் நடந் ததை தெரிவித்துள்ளார். அதன்பிறகு, உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு மேல் சிக்கிசைக்காக அவரை அனுப்பி வைத்தனர்.   இச்சம்பவத்தை அறிந்த அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். மல்லிகா, மாவட்டத் தலைவர் ஏ. ஜெயா, நகரச்  செயலாளர் எஸ். நிர்மலா ராணி, ஒன்றி யச் செயலாளர் எஸ். தமிழ்மணி, மலை வாழ் மக்கள் சங்க மாநில துணைத் தலை வர் கண்ணகி உள்ளிட்டோர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், பழங்குடியின மூதாட் டியை பாலியல் வன்கொடுமை செய்த  குற்றவாளியை, காவல் துறையினர் உட னடியாக கண்டு பிடித்து கைது செய்ய  வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை யும், காவல் துறையையும் மாதர் சங்கம்  வலியுறுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.