தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோட்டைப்பட்டினம் கடல் பகுதியில் செயற்கை பவளப் பாறைகள் நிறுவும் பணி

8 Feb 2026, 3:55 pm
கோட்டைப்பட்டினம் கடல் பகுதியில் செயற்கை பவளப் பாறைகள் நிறுவும் பணி
<p><strong>கோட்டைப்பட்டினம் கடல் பகுதியில் செயற்கை பவளப் பாறைகள் நிறுவும் பணி</strong></p> <p>புதுக்கோட்டை ஆட்சியர் &nbsp;துவக்கி வைத்தார் அறந்தாங்கி, பிப்.8 - புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினம் கடல் பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் செயற்கை &nbsp;பவளப் பாறைகள் நிறுவும் பணியை மாவட்ட &nbsp;ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்தார். தற்போதைய சூழலில் கடலில் மீன்வளம் குறைந்து வரும் சூழல் உள்ளதால், மீன வர்களுக்கு போதிய அளவு தினசரி மீன்கள் &nbsp;கிடைக்காமல் வருவாய் இழப்பு ஏற்படு கிறது. அதன்படி கடலில் &nbsp;மீன் வளத்தை அதி கரித்திடவும், வளம் குன்றா மீன் வளத்தை பாதுகாத்திடவும் கடலில் &nbsp;செயற்கை பவளப் பாறைகள் அமைக்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்றிய, மாநில அரசின் பங்குத் திட்டமான &nbsp;பிரதம மந்திரி மீன்வள மேம்பாடு திட்டத்தின் கீழ் 8 மீனவ கிராமங்களில் உள்ள கடல் &nbsp;பகுதியில் செயற்கை பவளப்பாறைகள் &nbsp;அமைக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அர சால் ரூ.9.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு, மூன்று வகை வடிவங்களில் முக்கோண &nbsp;வடிவம் 3.360 கிணறு, வட்ட வடிவம் 1400 மற்றும் குமுவடிவம் 800 என மொத்தம் 5760 &nbsp;எண்ணிக்கையிலான செயற்கை பவளப் பாறைகளின் கட்டுமானப் பணிகள் முடிக்கப் பட்டுள்ளன. தொடர்ந்து, கோட்டைப்பட்டினம் கடல் பகுதியில் சுமார் 900 எண்ணிக்கை செயற்கை &nbsp;பவளப் பாறைகள் நிறுவும் பணி துவக்கி வைக்கப்பட்டது. இதனால் மீன்கள் இனப் பெருக்கம் செய்திடவும் மீன் குஞ்சுகள் பாது காப்பாக வளர்ந்திடவும், மீன்களுக்கு உறை விடமாகவும் செயல்படும். மீன் பலம் அதி கரிப்பதால் மீனவர்களுக்கு மீன்பிடிப்பு திறன் அளவு அதிகரித்து அதிக வருவாய் கிடைக்கும். எனவே இந்த பணிகளை விரைந்து &nbsp;முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர &nbsp;மாவட்ட ஆட்சியர் மு.அருணா அறிவுறுத்தி னார். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (மீன் வளத்தை திருச்சி) பிரபாவதி, உதவி &nbsp;இயக்குநர் (மீன் வளத்துறை புதுக்கோட்டை &nbsp;பஞ்சராஜா, உதவி செயற்பொறியாளர் (மீன்பிடித் துறை முகம் கோட்டம்) விக்னேஷ் வர் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள், மீன வர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.