வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு
9 Apr 2026, 5:30 am

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

வாக்கு எண்ணும் அறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகள் ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு வளையங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.