வாக்குச்சாவடிகளில் ஆய்வு
22 Mar 2026, 4:19 pm
<p><strong>வாக்குச்சாவடிகளில் ஆய்வு</strong></p>
<p>அவிநாசி, மார்ச் 22- அவிநாசியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் கண்காணிப்பாளர் ஞாயிறன்று ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்.23 ஆம் தேதி நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி (தனி) சட்டமன்ற தொகுதியில் 372 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவிநாசி மற்றும் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் கண்காணிப்பாளராக சந்திரலேகா மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஞாயிறன்று கருவலூர் ஊராட்சி பகுதியிலுள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் ராக்கியாபாளையம், சேவூர், வையாபுரி கவுண்டன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள் ஏற்பாடு குறித்தும், அவிநாசி தேர்தலில் பணியாற்றும் ஊழியர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.</p>
