முந்தய பக்கம்

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

9 Apr 2026, 5:30 am
வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

உத்தங்கரை, ஏப்.9- உத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக தனித்தனி அறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளின் ஜன்னல்கள் அனைத்தும் பிளைவுட் தகடு கொண்டு மூடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் அறைகளில் இரும்பு வலை தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தரைப்பகுதியில் வர்ணம் பூசி எண்கள் மற்றும் அடையாளங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக காவல் துறை பார்வையாளரான லதா மனோஜ், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அலுவலர்கள், முகவர்கள் வந்து செல்லும் பாதை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram