அரசியல் சாசனம் தந்துள்ள உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தல்
6 Dec 2025, 2:48 pm
<p><strong>அரசியல் சாசனம் தந்துள்ள உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தல்</strong></p>
<p>உடுமலை, டிச.6 - இந்திய அரசியல் சாசனம் தந்துள்ள அனைத்து உரிமைக ளையும் பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்றக் கழகத்தின் சார்பில் சனியன்று உடுமலை நகராட்சி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மாவட்டத் தலைவர் அப்துல் கய்யூம் தலைமை வகித்தார். இதில், இந்திய கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டு, மக்களின் வாழ்வுரிமை, வாக்குரிமை, வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாக்கும் வகை யில் அரசியல் சாசனம் தந்துள்ள அனைத்து உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், நகரக்குழு உறுப்பினர் சக்திவேல், திமுக நகரச் செயலாளர் வேலுச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ரணதேவ், மதிமுக நகர செயலாளர் ராம்தாஸ், விசிக தெற்கு மாவட்டச் செயலாளர் சதிஸ்குமார், திராவிடர் கழ கத்தின் மாவட்டச் செயலாளர் தம்பி. பிரபாகரன் மற்றும் தமி ழக வாழ்வுரிமை கட்சியின் பகத்சிங் பழனியார் உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர்.</p>
