தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

23 Feb 2026, 5:35 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மாணவி பாலியல் வன்கொடுமை: சாட்சி விசாரணை நிறைவு

கோவை, பிப்.23- கோவையில் கல்லூரி மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மகளிர் நீதி மன்றத்தில் சாட்சி விசாரணை நிறைவடைந்த நிலை யில், வழக்கின் தீர்ப்பு தேதி விரைவில் அறிவிக்கப்ப டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை விமான நிலையம் அருகே கடந்தாண்டு நவம்பர் மாதம் காரில் தனது நண்பருடன் பேசிக்  கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று பேர்  கொண்ட கும்பலால் கும்பல் பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச் சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர் பாக சதீஷ், கார்த்திக், தவசி ஆகிய மூன்று பேரை பீள மேடு தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்  பிடித்து கைது செய்தனர். சிகிச்சைக்கு பின்னர்  அவர்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இந் நிலையில் இந்த வழக்கில் ஒரு மாதத்தில் குற்றப்பத்தி ரிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும், விரைந்து குற்ற வாளிகளுக்கு சட்டரீதியான தண்டனை வழங்கப்படும்  என தமிழக முதல்வர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து  ஒரு மாதத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப் பட்ட நிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. சுமார் 150 சாட்சிகளிடம் மூடப்பட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் நடைபெற்று வந்த  சாட்சி விசாரணை திங்களன்றுடன் நிறைவடைந்துள் ளது. அரசு தரப்பினரின் சாட்சியங்கள் பதிவு செய்யப் பட்ட நிலையில், புதனன்று (இன்று) குற்றம் சாட்டப்பட் டவர்களிடம் இறுதி விசாரணை நடத்தப்பட உள் ளது. இதைத்தொடர்ந்து தீர்ப்பு தேதி அறிவிக்கப் படும் என எதிர்பார்க்கபடுகின்றது. இந்த வார இறுதி  அல்லது அடுத்த வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப் புள்ளதாக கூறப்படுகிறது.

யானை தாக்கி 4 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை, பிப்.23- வால்பாறையை அடுத்த மலைவாழ் குடியிருப்புக் குள் புகுந்த ஒற்றை யானை தாக்கியதில், 4 வயது  சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்துள்ள  காடம்பாறை, காட்டுப்பட்டி பழங்குடியினர் கிரா மத்தை சேர்ந்தவர் அமுதா. இவர் தனது 4 வயது பேரன்  வருண் என்பவருடன் திங்களன்று காலை வீட்டில் இருந்தபோது, திடீரென குடியிருப்புக்குள் ஒற்றை யானை புகுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் வீட் டைத் தாக்கிய அந்த யானை, சிறுவன் வருணை தனது  தந்தத்தால் குத்தித் தூக்கி வீசியது. இதில் பலத்த காய மடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  யானையிடம் இருந்து பேரனை மீட்கப் போராடிய மூதாட்டி அமுதாவையும் அந்த யானை பலமாகத்  தாக்கியது. இதில் அவருக்கு உடலில் பல இடங்க ளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து யானையை விரட்டியடித்தனர். இதன்பின் படு காயமடைந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து சிறு வனை கொன்ற யானையை அடர்ந்த வனப்பகுதிக் குள் விரட்ட வேண்டும் என்றும், உயிரிழந்த சிறுவனின்  குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்  என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். இச்சம்பவம் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தையும், அச் சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

60 வயது பூர்த்தியடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.23- 60 வயது பூர்த்தியடைந்த கலைஞர்க ளுக்கு மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும்  என நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள்  வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தருமபுரி மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் சார்பில் ஞாயிறன்று கலைவிழா நடைபெற்றது. முன்னதாக, 100க்கும் மேற்பட்ட தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் வேடமணிந்து இசைக்கருவிகள் இசைத்தும் கலைப்பேரணி யில் கலந்து கொண்டனர். பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே இருந்து,  இப்பேரணியை கலை பண்பாட்டுத்துறை சேலம் மண்டல இயக்குநர் சங்கரராமன் துவக்கி வைத்தார். பேரணியின் முடிவில் நடந்த கலை விழாவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர் வாகி சங்கர் எழுதிய ‘நெடுமரம்’ என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது. மாநில கெளரவத் தலைவர் சிங்காரவேலன், துணைச்செயலாளர் முருகசாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சாரதி, முனியப் பன், எழுத்தாளர் கமலாலயன், மாவட்டத் தலைவர் சின்னசாமி, செயலாளர் சசிகுமார், பொருளாளர் ராமு, துணைத்தலைவர் அண்ணாதுரை, துணைச்செயலாளர் மாதேஷ் (எ) மூர்த்தி, உட்பட பலர் கலந்து  கொண்டனர். இவ்விழாவில், 60 வயது நிறைவடைந்த கலைஞர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கலைத்திறன் மிக்க  கலைஞர்களுக்கு மாவட்ட அளவில் வழங்கப் படும் விருதுகளோடு மட்டுமல்லாது, கலை மாமணி விருதும் வழங்க வேண்டும். கலை ஞர்களுக்கு சலுகை விலையில் தற்போது வழங்கப்பட்டு வரும் பேருந்து பயண அட்டையை இலவச பேருந்து பயண அட்டை யாக வழங்க வேண்டும். அனைத்து கலை ஞர்களுக்கும் இலவச மனைப்பட்டா மற்றும்  அரசு வீடு வழங்க வேண்டும். வாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்களின் இயற்கை மர ணத்திற்கு ரூ.3 லட்சம், விபத்து மரணத் திற்கு ரூ.5 லட்சம், கலை நிகழ்ச்சியின் போது  உயிரிழக்கும் கலைஞர்களுக்கு நிவாரணத் தொகையை ரூ.10 லட்சம் வரை உயர்த்தி  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.

போதை ஊசி விற்பனை

தருமபுரி, பிப்.23- தருமபுரி, அதியமான் கோட்டை  பகுதியில் சனி யன்று இரவு போலீசார், ரோந்துப்பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, மிட்டா ரெட்டிஅள்ளி அருகே உள்ள  மயில்கொட்டாய் பகுதியை சேரந்த பி.வஜ்ரவேல் (47) என்பவர், இளைஞர்களுக்கு போதை மருந்துகளை விநி யோகிப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அவரது வீட்டை  சோதனை மேற்கொண்ட தில், வீட்டுக்குள் போதை மருந்துகள் மற்றும் ஊசிகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஊசி, மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு நிவாரணம்

நாமக்கல், பிப்.23- திருச்செங்கோடு வட்டம், குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா நடன பயிற்சியின்போது, மயங்கி விழுந்து மாணவி உயிரி ழந்தார். இந்நிலையில், மாணவியின் பெற்றோருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3.00 லட்சத்திற்கான காசோலையினை நாமக்கல்  மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, திங்களன்று வழங்கி, ஆறுதல் தெரிவித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உட்பட பலர் உள்ளனர்.

காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் விழிப்புணர்வு

உதகை, பிப்.23- முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப் பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படாத வகையில், வனத் துறையினர் தீவிரமாக கண்காணிப்பதுடன், துண்டு  பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்ற னர். கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே, முது மலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகள், நீலகிரி  வன கோட்டத்திற்குட்பட்ட அப்பர்பவானி, கோரக்குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் புற் கள், செடி, கொடிகள் மற்றும் மரங்கள் கருகி காயத்  துவங்கியுள்ளன. இதனால், முதுமலை காப்பகத்தில் உள்ள விலங்கினங்கள் உணவு தேடி இடம் பெயர துவங்கியுள்ளன. வனங்கள் காய்ந்து வருவதால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. காட்டுத்தீ ஏற்படாத வகையில் வனத்துறையினர் தொடர் கண் காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தீ  தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக முதுமலை யில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மசினகுடி கோட்டத்திற்குட்பட்ட சிங்காரா, மசினகுடி, மற்றும் சிகூர் ஆகிய வனசரகங்களுக்குட்பட்ட வனத் துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டி யும், பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி யும் தீ தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்ற னர். வாழைத்தோட்டம், மாயார், பூதநத்தம், செம் மநத்தம் ஆகிய கிராமங்களின் சூழல் மேம்பாட்டு மையம், ஆனைகட்டி, சிறியூர் ஆகிய கிராம வனக் குழுவினருடன் நடைபெற்ற கூட்டத்தில் காப்புக் காடுகளில் தீயினால் ஏற்படும் சேதம் மற்றும் அழிவு கள் குறித்தும் அதை தடுக்கும் முறைகள் பற்றியும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. மசினகுடி அரசு  பள்ளியில் மாணவர்களிடையே வனத்தீ பற்றிய விழிப் புணர்வு கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டது. கூடலூர் தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் பணிகள் துறையினரால் மசினகுடி பொதுமக்களிடையே தீ தடுப்புமுறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மே  மாதம் வரை கடுமையான வெயில் காலம் என்பதால்,  வனத்தை ஒட்டிய சாலைகள் வழியாக பயணிக்கக் கூடிய பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தீ  மூட்டி சமைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண் டாம். தமிழ்நாடு வனச்சட்டம் 1882 பிரிவு 21ன் படி  வன நிலத்தில் தீ வைத்தாலோ, தீ ஏற்பட காரண மாக இருந்தாலோ அவருக்கு அதிகபட்சமாக 5  ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அப ராதம் விதிக்கப்படும். தீயினால் ஏற்பட்ட நஷ்ட ஈடும்  சேர்த்து வசூலிக்கப்படும். வேண்டுமென்றோ அல்லது  கவனக்குறைவாகவோ தீ வைத்தால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும், என்றனர்.

கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.23- பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில், பூட்டி கிடக்கும்  பொது கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்  என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் 10 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பாப்பாரப்பட்டி,  பெரியூர், பிக்கிலி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதி களில் இருந்து மாணவர்கள், பொதுமக்கள் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல  பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் வந்து  செல்கின்றனர். இதனால் பொதுமக்களின் பயன்பாட்டிற் காக கடந்த 2023-2024 நிதியாண்டின் கீழ் 15 ஆவது நிதிக் குழு  மானியத்தின் மூலம், பேருந்து நிலையத்தில் புதிதாக பொது  கழிப்பிடம் அமைக்கப்பட்டது. இந்த கழிப்பிடம் கட்டி முடிக் கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராத தால், பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் இயற்கை  உபாதைகளை வாரச்சந்தை, பழைய கழிப்பிடம் பகுதிகளில்  கழித்து வருகின்றனர். இதனால் பேருந்து நிலையம் பின் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் துர்நாற்றம் வீசி, கொசுக் கள் உற்பத்தியாகி நோய் பரவும் அவல நிலை ஏற்படு கிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக் கின்றனர். எனவே, கட்டி முடிக்கப்பட்டு, பூட்டி கிடக்கும் கழிப் பிடத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்  என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிஐடியு போராட்டம் வெற்றி: நிலுவை பென்சன் வழங்கல்

கோவை, பிப்.23- அமைப்பு சாரா மற்றும் ஆட்டோ, கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்த ஓய்வூதியர்களுக்கு மூன்று மாத நிலுவை பென்சன் சிஐடியு போராட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாத காலமாக நிலுவையில் இருந்த ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோவை மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு சிஐடியு-வினர் கடந்த பிப்.17 ஆம் தேதியன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் தொழிலாளர் உதவி ஆணையாளர் மற்றும் அமைப்புசாரா நல வாரிய செயலாளர் ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, மூன்று தினங்களுக்குள் ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையேற்று காத்திருப்புப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டம் நடத்திய அடுத்த நாளே ரூ.400 கோடியை தமிழக அரசு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நல வாரிய அலுவலகங்களுக்கும் அனுப்பியது. இந்த நிதி கிடைத்தவுடன் வங்கிகளுக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டு, உறுப்பினர்களுக்கு இசிஎஸ் மூலம் பணம் வழங்கினர். மூன்று மாத நிலுவைப் பணம் வழங்கப்பட்டதற்கு ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ‘போராட்டத்தில் பங்கெடுத்த. ஆதரவு கொடுத்த. கோரிக்கையை நிறைவேற்றிய அனைவருக்கும் நன்றி’ என சிஐடியு கோவை மாவட்டக்குழு தெரிவித்துள்ளது.

பிப்.28இல் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருப்பூர், பிப்.23 – திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் பிப்ரவரி 28 ஆம் தேதி சனியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக  அறை எண் 240இல் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறி வித்துள்ளது.

ரூ.44.71 லட்சத்திற்கு ஏலம்

திருப்பூர், பிப்.23- வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத் துக்கு, விளாத்திகுளம், வாணியம்பாடி, அப்பியம் பட்டி, பூண்டி, மங்கலப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாயிகள் 570  மூட்டைகளில் 29 டன் தேங் காய் பருப்புகளை விற்ப னைக்கு கொண்டு வந்தி ருந்தனர். இதில், தேங்காய்  பருப்பு கிலோ ரூ.110.60 முதல் ரூ.185.49 வரை விற்ப னையானது. சராசரி விலை ரூ.177.66. கடந்த வார சராசரி  விலை ரூ.180.69. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை  ரூ.44.71 லட்சம் ஆகும்.

12 ஆண்டுகளாக அலைக்கழிக்கும் அதிகாரிகள் நியாயம் கேட்டு தொடர்ந்து போராடும் முதியவர்

திருப்பூர், பிப்.23 - விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு விவசாயம் செய்த விவசாயி யின் நிலம் தீயில் எரிந்த சம்பவத்தில்  வேளாண்மைத் துறை அதிகாரி தவ றாக அறிக்கை சமர்ப்பித்தார். அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தனது கரும்பு தோட்டம் எரிந்து பாதிக்கப்பட்டதற்குரிய இழப் பீடு வழங்க வேண்டும் என கடந்த 12  ஆண்டு காலமாக, வயது முதிர்ந்த  நிலையிலும் விவசாயி தொடர்ந்து போராடி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் காணை பகுதியில் வசித்து வருபவர் வி. பக்தவச்சலம் (வயது 80). இவர் கடந்த 2007 - 08 ஆம் ஆண்டு முதல்  கரும்பு விவசாயம் செய்து வந்திருக் கிறார். ஈஐடி பாரி நிறுவனத்திற்கு கரும்பு தருவதாக போட்டிருந்த ஒப் பந்தத்தை கைவிட்ட நிலையில், தனது வயலில் விளைந்த கரும் பைக் கொண்டு தனியாக வெல்லம்  காய்ச்சி வியாபாரம் செய்து வந்தி ருக்கிறார். இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று  திடீரென இவரது 10.5 ஏக்கர் கரும்பு  வயல் தீப்பிடித்து எரிந்து சாம்பலா னது. சுமார் 500 டன் கரும்பு அழிந்து  போனது என்று இவர் கூறுகிறார். அருகாமை தோட்டத்தில் தீப்  பற்றிய நிலையில் தனது தோட்டத்தி லும் பரவி கரும்பு எரிந்து விட்டதாக பக்தவச்சலம் கூறியிருக்கிறார். அப்போதைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து இழப்பீடு கேட்டபோது, வேளாண்மை இணை இயக்குநர் குழு மூலம் ஆய்வு செய்ய ஆட் சியர் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் அந்த வேளாண் இணை இயக்குநர், பக்தவச்சலத்தின் கரும்பு வயல் மீது உயர் மின்ன ழுத்தக் கம்பி வடம் போனது என்றும், அதில் பட்டு தீப்பிடித்து  எரிந்திருக்கிறது என்றும் உண்மைக்குப் புறம்பாக, தவறான அறிக்கை சமர்ப்பித்ததாக பக்தவச் சலம் தெரிவித்தார். இதையடுத்து மன உளைச்சல் அடைந்த பக்தவச்சலம் தற் கொலை செய்து கொள்ளப் போவ தாகவும், தனது உடலை ஈரோடு எம். பி.யாக இருந்த கணேசமூர்த்தியி டம் அல்லது திருப்பூரைச் சேர்ந்த  தனது நண்பரிடம் ஒப்படைக்கும்ப டியும் முதல்வர் தனிப்பிரிவுக்கு கடி தம் அனுப்பி இருக்கிறார். இந்த  கடிதத்தை தொடர்ந்து விழுப்பு ரம், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல் வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பியுள்ளனர். இதையடுத்து திருப்பூர் மாவட்ட அப்போதைய ஆட்சியர் எஸ்.வினித் இவரை நேரில் வரவ ழைத்து விசாரித்திருக்கிறார். இவ ரது பாதிப்பு குறித்து கேட்டறிந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க அவர் கடிதம் எழுதியுள்ளார். தொடர்ந்து மூன்று முறை கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை. விழுப்புரம் கூடுதல் ஆட் சியராக பொறுப்பேற்ற ஸ்ருதன் ஜெய்நாராயணனிடமும் அவர் முறையிட்டிருக்கிறார். இதைக் கேட்ட ஸ்ருதன் ஜெய்நாராயணன், அரசு அதிகாரிகள் தவறு செய்து  விட்டனர். உங்களுக்கு இழப்பீடு  தருகிறோம் என உறுதியளித்ததாக பக்தவச்சலம் கூறுகிறார். எனினும் அதன் பிறகும் எந்த  நடவடிக்கையும் இல்லை. இந்நி லையில் தொடர்ச்சியாக மனித  உரிமை ஆணையம் உள்ளிட்ட பல் வேறு அரசுத் துறை அதிகாரிகளிட மும் தனது பாதிப்பை தெரிவித்து  நியாயம் கிடைக்க முதியவர் பக்த வச்சலம் தொடர்ந்து போராடி வரு கிறார். 80 வயதான பக்தவச்சலம் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வந்து ஆட் சியரிடம் புகார் மனு அளித்தார்.  தனது கரும்பு வயலின் மீது உயர்மின்னழுத்த மின்கம்பி எது வும் போகவில்லை. எனவே கரும்பு  வயல் தீப்பிடித்து எரிந்ததற்கு தவ றான காரணம் சொன்ன விழுப்புரம்  மாவட்ட வேளாண்மை துறை அப் போதைய இணை இயக்குநர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் தண்டம் வசூலித்து தனது  கரும்பு வயல் எரிந்து சாம்பலான தற்கு உரிய இழப்பீடு தொகை ரூ.12  லட்சம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். முதல்வரைத் தொடர்பு கொள்ள முயன்றாலும், காவல்  துறையினர், அரசு அதிகாரிகள் தன்னை சந்திக்க விடாமல் தடுத்து விட்டனர். எனக்கு நியாயம் வேண் டும். 12 ஆண்டுகளாகப் போராடி வருகிறேன் என்று கண்ணீர் மல்க பக்தவச்சலம் கூறுகிறார். அரசு இவர் பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமா?

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.