ரயில்வே சுரங்கப்பாதையை அகலப்படுத்த வலியுறுத்தல்
1 Feb 2026, 3:51 pm
<p><strong>ரயில்வே சுரங்கப்பாதையை அகலப்படுத்த வலியுறுத்தல்</strong></p>
<p>தருமபுரி, பிப்.1- மொரப்பூர் அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், மொரப்பூரை அடுத்த நடுப் பட்டியில், பிரசித்தி பெற்ற சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவிலுக்கு தருமபுரி, திருப் பத்துார், வேலூர், கிருஷ்ணகிரி, திரு வண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலி ருந்து, தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமை நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர் கள் வருகின்றனர். இந்நிலையில், மொரப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கி.மீ., தூர முள்ள கோவிலுக்கு செல்லும் வழியில், ஜோலார்பேட்டை – சேலம் ரயில் வழித்தடம் உள்ளது. இதை கடந்து செல்ல, சுரங்கவழி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங் கப்பாதை மிகவும் குறுகலாகவும், தாழ்வாக வும் உள்ளதால், பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் நிலை யுள்ளது. சரக்கு வாகனங்கள், வேன், கார் உள்ளிட்ட வாகங்கள் பல கி.மீ., தூரம் சுற்றிக் கொண்டு கோவிலுக்கு செல்லும் நிலையுள் ளது. மேலும், மழைக்காலங்களில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவதால், நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, சுரங்கப்பாதையை அகலப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டி கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
