முந்தய பக்கம்

ஓய்வுக்கால பணிக்கொடை வழங்க வலியுறுத்தல்

22 Feb 2026, 3:26 pm
ஓய்வுக்கால பணிக்கொடை  வழங்க வலியுறுத்தல்

ஓய்வுக்கால பணிக்கொடை  வழங்க வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, பிப்.22-  தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய ஒய்வு பெற்ற அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ஞாயிறன்று திருச்சியில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் நாகலிங்கம் தலைமை வகித்தார். மாநில தலைமையிட செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சேரலாதன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள கமுட்டேஷன் பெண்டிங்-ஐ அரசு உடனே வழங்க வேண்டும். இறப்பு மற்றும் ஓய்வு கால பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  சென்னை மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், சென்னை மண்டலச் செயலாளர் சந்திரசேகரன், திருச்சி மண்டலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் சுந்தரம் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram