முந்தய பக்கம்

ரேசன் கடை மூலம் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தல்

12 Dec 2025, 3:12 pm
ரேசன் கடை மூலம் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தல்
<p>ஈரோடு, டிச.12- பொது விநியோக திட்டத்தின் மூலம், தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங் கத்தின் ஈரோடு மாவட்ட 2 ஆவது மாநாடு வெள்ளியன்று பெருந்துறையில் நடைபெற் றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.அர் ஜுனன் தலைமை வகித்தார். முருகானந்தம் வரவேற்றார். மாநிலத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் டி.பி.கோபிநாத் அறிக் கையை முன்வைத்தார். தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரி முத்து சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில், பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளால் மாசடைந்துள்ள பகுதிகளில் விவசாயத்திற் கும் சுத்தமான தண்ணீர் வழங்க வேண்டும். பொது விநியோக கடைகளின் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். வெள்ளை ஈயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டக்கலைத்துறை யின் மூலம் தென்னை மரத்திற்கு உரம் வழங்க வேண்டும். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் மரங்களுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட் டத் தலைவராக ஆர்.ஈஸ்வரமூர்த்தி, துணைத்தலைவராக டி.குமார், செயலாள ராக டி.பி.கோபிநாத், துணைச்செயலாளராக எஸ்.துரைசாமி, பொருளாளராக எஸ்.சென் னியப்பன் உட்பட 13 பேர் கொண்ட மாவட் டக்குழு தேர்வு செய்யப்பட்டது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.விஜயமுரு கன் நிறைவுரையாற்றினார். முடிவில், பால சுப்பிரமணியம் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram