மயான வசதி ஏற்படுத்தித்தர வலியுறுத்தல்
26 Dec 2025, 4:32 pm
<p><strong>மயான வசதி ஏற்படுத்தித்தர வலியுறுத்தல்</strong></p>
<p>தருமபுரி, டிச.26- நல்லம்பள்ளி அருகே மயான வசதி இல்லாததால் இறந்த வரின் உடலை முட்புதர் நிறைந்த ஏரிப் பகுதியில் அடக்கம் செய்யும் அவலநிலை நிலவுகிறது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கோணங்கி நாய்கனள்ளி ஊராட்சிக்குட்பட்ட பி.அக்ராஹாரம், அம் பேத்கர் நகரில் பட்டியலினத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் மயான வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடலை சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏரிக்கரையோ ரத்தில் முட்புதர்களிடையேயே அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும், சேறும், சகதி நிறைந்தப் பாதையில் சடலத்தை எடுத்து செல்ல வேண்டியதுள்ளது. வேறு மாற்று வழி இல்லாததால், குடும்ப உறுப்பினர்கள் கயிறுகளை பயன்படுத்தி சடலத்தை ஏரிக்கு கொண்டு செல்ல நிர்பந்திக் கப்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்ப குதி மக்கள் சுடுகாட்டிற்கு தனிப்பாதை அமைக்கக் கோரி பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மயான வசதி மற் றும் அதற்கான பாதை ஏற்படுத்தித்தர மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளது.</p>
