தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

3 Jan 2026, 2:20 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பொம்மிடி - ஏற்காடுக்கு பேருந்து இயக்க வலியுறுத்தல்

தருமபுரி, ஜன.3- பொம்மிடியில் இருந்து ஏற்காட்டிற்கு பேருந்து வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி - சேலம் மாவட்ட எல்லையிலான பொம் மிடி அருகே வீராச்சியூர், பூமரத்தூர், கொளாவூர் உட் பட 30 கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் தங்க ளது அத்தியாவசிய தேவைகளுக்காகவும், தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்கவும், பொருட்கள் வாங்கவும், பொம்மிடி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளை சார்ந்துள்ளனர். இப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பி.துறிஞ் சிப்பட்டி, பையர்நத்தம், பொம்மிடி, பாப்பிரெட்டிப் பட்டி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். பொம்மிடியில் இருந்து வீராச்சியூர் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு தார்சாலை வசதி இருந்தும், மாணவர்கள் சென்று  வர பேருந்து வசதியில்லை. இதனால், தினமும் நடந்து சென்று படிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட் டுள்ளனர். இதுமட்டுமின்றி, பொம்மிடியில் இருந்து ஏற்காடு மலை சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. வெளிமாநில, மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பொம்மிடி வழியாக தான்  ஏற்காட்டிற்கு செல்கின்றனர். இதனால் குறைந்த அளவு தூரம் கொண்ட இந்த வழியாக, அரசு பேருந்து இயக்க வேண்டும். அவ்வாறு பேருந்து வசதி ஏற்படுத்தி னால் மலைக்கிராம மக்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் பயன்பெறுவார்கள். மேலும், பொம்மிடி சுற்றுவட்டார பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த மக்கள் ஏற்காட்டுக்கு செல்ல வேண்டுமெனில், சேலம் சென்று  சுமார் 50 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டும். பொம்மிடியில் இருந்து வீராச்சியூர் வழியாக சென் றால் 25 கிலோமீட்டரில் எளிதாக சென்று வர முடியும். இது மட்டுமல்லாமல் பெங்களூரு உட்பட பல்வேறு  பகுதிகளில் இருந்து பொம்மிடிக்கு ரயிலில் ஏராள மானோர் வருகின்றனர். இந்த மலைக்கிராமங்களில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் அவர்கள் நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் வந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு,  பொம்மிடியில் இருந்து ஏற்காட்டிற்கு பேருந்து வசதி ஏற்படுத்தித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தீக்குளிக்க முயற்சி

கோவை, ஜன.3- கோவை மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட் டது. கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத் திற்கு சனியன்று காலை 8 மணி அளவில் வந்த நபர் ஒருவர் திடீரென தான் கையில் வைத்திருந்த பெட் ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது பணியில் இருந்த காவலர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தி மீட்டனர். இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது தற்கொலைக்கு முயன்றவர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங் கியை சேர்ந்த முகமது யாசின் என்பதும், அவர் பொள் ளாச்சியில் உள்ள பரோட்டா கடையில் தங்கி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் துபாயில் பணியாற்றிய போது ஆறு மாதத்திற்கு முன்பு சர வணம்பட்டியை சேர்ந்த முகமது சாலிக் என்பவ ரிடம் நிலம் வாங்குவதற்காக ரூ.4.5 லட்சத்தை கொடுத்த தாகவும் அதற்கான ஆவணங்களையும் பெற்றிருந்த நிலையில், தற்போது நிலத்தையும், பணத்தையும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனைய டுத்து வெள்ளியன்று அவரை பொள்ளாச்சி அம்பராம் பாளையம் பகுதிக்கு வரவழைத்து நண்பர்களோடு சேர்ந்து தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதில்  காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லாமல் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்த தாகவும், போலீசாரம் கண்டு கொள்ளாமல் அனுப்பி விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க அனுப்பி வைத்தனர்.

குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

ஈரோடு, ஜன.3- குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண் டும் என அமைச்சர் சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை, ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில், குடிநீர் வடிகால் வாரிய பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் வெள் ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தலைமை வகித்து பேசுகையில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 434 கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் முன்னேற் றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. காங்கேயம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட 151 மேல்நிலை தொட்டிக ளுக்கு 148 பகிர்மான குழாய்கள் வழங்கும் பணி நிறை வடைந்துள்ளது. மேலும், பகிர்மானக் குழாய்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளும் போது எதிர்கொள் ளும் இடர்பாடுகளை உடனடியாக களைந்து, பொது மக்களுக்கு 434 காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க தகுந்த ஏற்பாடுகளை செய்து தர வேண் டும். குடிநீர் வடிகால் வாரியத்தால் முடிக்கப்பட வேண்டிய பணிகளையும், ஊராட்சிகள் விரைந்து  முடிக்கும் படி அறிவுறுத்தினார். மேல்நிலை தொட்டிக ளுக்கு ஏற்றப்படும் நீரின் அளவு குறித்தும், விநியோகம் செய்யப்படும் அளவு குறித்தும் அறிக்கை சமர்பிக்கப் பட்டது. முழுமையாக பணிகள் அனைத்தையும் முடித்து முழு அளவு நீரேற்றம் செய்து சீரான குடிநீர் விநியோகத்தினை விரைந்து வழங்க வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியா, மேற்பார்வை பொறியாளர் விநாய கம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேன் விபத்து: 2 குழந்தைகள் உட்பட 23 பேர் காயம்

ஈரோடு, ஜன.3- பெருந்துறை அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட் பட 23 பேர் காயமடைந்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட் டம், பணிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் அருண்  (25). இவரது மனைவி அனுஷாவுக்கு வெள் ளியன்று வளைகாப்பு நடத்த திட்டமிட்டி ருந்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வ தற்காக அனுஷாவின் உறவினர்கள் சேலத்தி லிருந்து வேனில் வெள்ளியன்று காலை புறப் பட்டனர். சேலம் மாவட்டம், மல்லமூப்பம் பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் சந் தோஷ் (26) என்பவர் வேனை ஓட்டிச் சென் றார். ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடியைக் கடந்து, வாய்ப்பாடி பிரிவு அருகே உள்ள  பாலத்தின் வளைவில் வேன் சென்று கொண் டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள் ளானது. இதைப்பார்த்த அப்பகுதியில் இருந் தவர்கள் உடனடியாக விரைந்து சென்று இடி பாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, பெருந் துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்தில் வேனில் பயணம் செய்த 11 ஆண்கள், 10 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம்  23 பேர் காயமடைந்தனர். இதில் இருவர் மேல்  சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

மது போதையில் கல்லூரி பேராசிரியர் அடாவடி

உதகை, ஜன.3- உதகை பாலிடெக்னிக் கல்லூரி போரா சிரியர், மதுபோதையில் அடாவடியில் ஈடு பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகையை அடுத் துள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் அரசு பாலி டெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாண வர்கள் பயின்று வருகின்றனர். சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராக பணியாற்றி வந்த ரகுராம், தற் போது உதகை பாலிடெக்னிக் கல்லூரியில் கருவியல் மற்றும் கட்டுப்பாடு துறை பேரா சிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கல் லூரியில் சக பேராசிரியரிடம் தகராறில் ஈடு பட்டுள்ளார். அப்போது மாணவர்கள் தடுக்க முற்பட்டபோது, ரகுராம் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. ‘மதுபோதையில் ஏன் கல்லூரிக்கு வந்தீர்கள்?’ என கேள்வி எழுப்பி அவரை சிறைபிடித்தனர். தொடர்ந்து, ‘தன்னை விடவில்லையென்றால், பெரும்  விபரீதத்தை சந்திப்பீர்கள்’ என மாணவர் களை மிரட்டி தப்பிக்க முயன்றுள்ளார். அப் போது மாணவர்கள் ஒன்று சேர்ந்து, காவல் துறையினர் வரும் வரை நீங்கள் இங்கே இருக்க வேண்டும் என தெரிவித்து, வகுப் பறையில் வைத்து கதவை பூட்டினர். நீண்ட நேரத்திற்கு பின்னர் காவல் துறையினர் கல்லூரிக்கு சென்று விசாரித்ததில், பேரா சிரியர் மது போதையில் இருந்தது உறுதியா னது. இதைத்தொடர்ந்து உடனடியாக பேரா சிரியரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்தான காணொலி காட்சி கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அபாயகரமான வளைவில் அடிக்கடி உயிரிழப்புகள்! வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை

சேலம், ஜன.3- அபாயகரமான வளைவில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு வருவதை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டு மென வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரில் இருந்து கல்லேரிப்பட்டி, கல்யாணகிரி, குமாரபாளை யம், பனைமடல், இடையப்பட்டி, தும்பல் வழியாக கல்வராயன் மலை கருமந்துறை செல்லும் பிரதான நெடுஞ்சாலை அமைந் துள்ளது. இச்சாலை வழியாக ஆத்தூர், தம்மம்பட்டி பகுதியிலிருந்து கல்வராயன் மலை கருமந்துறை, கள்ளக்குறிச்சி, வெள்ளி மலை, தருமபுரி, கோட்டப்பட்டி, திருவண் ணாமலை பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், ஏத்தாப்பூர் - தும்பல் சாலை,  சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண் ணாமலை ஆகிய மாவட்டங்களை இணைக் கும் முக்கிய சாலையாக விளங்குவதால் நாளுக்குநாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இச்சாலையில், கல்யாணகிரி அரசமரத்து பேருந்து நிறுத்தம் அருகிலும்,  புதுசாலை பேருந்து நிறுத்தம் வாழப்பாடி யார் தோட்டம் அருகிலும் அபாயகரமான வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நி லையில் செவ்வாயன்று புதுசாலை வளைவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற  தாண்டானூரைச் சோ்ந்த ராஜா (55) நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி நிகழ்விடத்தி லேயே உயிரிழந்தார். இவருடன் சென்ற சிவச்சந்திரன் படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் வேகத் தடைகள் அமைக்க வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டி கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

இரண்டாவது நாளாக மலைரயில் போக்குவரத்து ரத்து

மேட்டுப்பாளையம், ஜன.3- நீலகிரி மலை ரயில் சேவை சனியன்று இரண்டாவது நாளாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித் துள்ளது. ஞாயிறன்று ரயில் சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் மேட்டுப் பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி  ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மலை ரயில்  செல்லும் இருப்பு பாதையில் கடந்த 1 ஆம் தேதி நள்ளிரவு  ஏற்பட்ட மண் சரிவுகளால் போக்குவரத்து ரத்து செய்யப்படுவ தாக வெள்ளியன்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. தண்ட வாளப் பாதையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் பாறைகளை  அகற்றி சேதமான இருப்பு பாதைகளை சீரமைத்த பின்னரே  மலை ரயில் மீண்டும் இயக்கப்படும் என்ற நிலையில் மலை  ரயில் கடந்து செல்லும் அடர்லி மற்றும் ஹில்குரோவ் ரயில்  நிலையங்களுக்கு இடையே பல்சக்கர தண்டவாள பாதை யின் மீது பல இடங்களிலும் மண்சரிவுகள் ஏற்பட்டு தண்ட வாளத்தின் மீது மண் சகதியும் பாறைகளும் விழுந்து கிடக்கின் றன. இதனை அகற்றும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக சனியன்றும் மேட்டுப்பாளை யம் முதல் குன்னூர் வரையிலான மலைரயில் சேவை ரத்து  செய்யப்பட்டது. இந்நிலையில் ஞாயிறன்று மலை ரயில் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.