தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

12 Dec 2025, 4:54 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

யானை நடமாட்டம்

தருமபுரி, டிச.12- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், அண் ணாமலை அள்ளி காப்பு காடு, முனியப்பன் கோவில் பகுதியில் ஒற்றை யானை  உலா வருகிறது. இதனால் அண்ணாமலை அள்ளி,  ஆராதஅள்ளி, கருக்கன அள்ளி, எழுமிச்சனஅள்ளி, சொன்னம்பட்டி, வாக்கன் கொட்டாய் காரிமங்கலம் கூட்ரோடு உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த கிராம மக்கள் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை வெளியில் தேவையின்றி நடமாட வேண் டாம். வயலுக்கு நீர் பாய்ச்ச இரவில் செல்ல வேண் டாம். யானை நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக தகவலளிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவு றுத்தியுள்ளனர்.

பைகமந்து கிராமத்தை தொட்டபெட்டா-வுடன் இணைக்க வலியுறுத்தல்

உதகை, டிச.12- பைகமந்து கிராமத்தை தொட்ட பெட்டா ஊராட்சியுடன் இணைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுதொடர்பாக அம்மனுவில் கூறி யிருப்பதாவது, உதகை அருகே உள்ள  பைகமந்து ஊரில் 180 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் ஊர் தற் போது வரை குன்னூர் தாலுகா மற்றும் கேத்தி ஊராட்சியில் உள்ளது. இதனால் சான்றிதழ்கள் பெறுவது உட்பட பல் வேறு சேவைகளுக்காக நாங்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும்  என்றால் குன்னூர் 35 கி.மீ., தூரத்திலும் கேத்தி 25 கி.மீ., தூரத்திலும் உள்ளது.  அலைச்சல் அதிகமாக இருப்பதால், பைகமந்து கிராமத்தை தொட்டபெட்டா ஊராட்சியுடன் இணைக்க நீண்ட கால மாக வலியுறுத்தி வருகிறோம். எங்க ளுக்கு வாக்கு உதகை சட்டமன்ற தொகு தியில் உள்ளது. எங்கள் ஆதார் கார்டு முகவரியில் குன்னூரும், ரேசன் கார்டு  முகவரியில் உதகையும் உள்ளது. இந்நிலையில், நீலகிரியில் 88 கிராம பஞ்சாயத்துகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் எங்கள் பைகமந்து கிராமம் இடம்பெறவில்லை. எனவே, பைகமந்து கிராமத்தை கேத்தி ஊராட்சியிலிருந்து பிரித்து, தொட்டபெட்டா ஊராட்சியின் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

குடியிருப்புப் பகுதியில் சுகாதார சீர்கேடு!

தருமபுரி, டிச.12- அரூர் நகராட்சி காவலர் குடியிருப்பு அருகே கொட்டப் படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அரூர் நகரத்தின் காவலர் குடியிருப்புப் பகுதியில் கொட் டப்பட்டும் குப்பை மாதக்கணக்கில் சுத்தம் செய்யப்படா மல் உள்ளது. அங்கு கழிவுநீர் கால்வாய் தண்ணீரும் குப்பையுடன் சேர்ந்து துர்நாற்றம் விடுகிறது. இங்கு உருவா கும் கொசுவால் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே, குவிந்துள்ள குப்பைகளை அகற்றி, சாலைகள் மற்றும் கால்வாயை சுத்தம் செய்து, கொசு கட்டுப் பாட்டு நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்த வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

டிச.15 இல் மின்தடை

ஈரோடு, டிச.12- ஈரோடு மாவட்டம், பெரி யாண்டிபாளையம், சிப்காட், ஈங்கூர் ஆகிய துணை மின்  நிலையங்களில் மாதாந்திர  பராமரிப்புப் பணிகள் டிச.15 ஆம் தேதியன்று (திங்க ளன்று) நடைபெறவுள்ளது. இதனால் ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடி புதூர், கவுண்டம்பாளையம் மற்றும் சிப்காட் வளாகம் தெற்கு பகுதி, கம்புளியம் பட்டி, சரளை, வரப்பாளை யம் மற்றும் நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங் கூர், மு.பிடாரியூர் உள்ளிட்ட  பகுதிகளில் திங்களன்று  காலை 9 மணி முதல் மாலை  5 மணி வரை மின் விநியோ கம் இருக்காது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.