தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சத்துணவு திட்டத்தில் பாலையும் சேர்த்து வழங்க வலியுறுத்தல்

30 Nov 2025, 4:29 pm
சத்துணவு திட்டத்தில் பாலையும் சேர்த்து வழங்க வலியுறுத்தல்
<p><strong>சத்துணவு திட்டத்தில் பாலையும் சேர்த்து வழங்க வலியுறுத்தல்</strong></p> <p>தருமபுரி, நவ.30- சத்துணவு திட்டத்தில் பாலை யும் சேர்த்து வழங்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர் சங்க தருமபுரி மாவட்ட 5 ஆவது &nbsp;மாநாடு, தருமபுரி முத்து இல்லத் தில் ஞாயிறன்று நடைபெற்றது. &nbsp;இம் மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் &nbsp;தலைவர் கே.அன்பு தலைமை &nbsp;வகித்தார். மாவட்ட நிர்வாகி ஜி. வெங்கட்ராமன் சங்கத்தின் கொடி யை ஏற்றி வைத்தார். மாவட்ட &nbsp;துணைத்தலைவர் ஆர்.சின்னசாமி &nbsp;அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். &nbsp;மாநாட்டை துவக்கி கைத்து மாநில &nbsp;பொதுச்செயலாளர் பி.பெருமாள் &nbsp;உரையாற்றினார். மாவட்டச் செய லாளர் எஸ்.தீர்த்தகிரி, பொருளா ளர் ஆர்.வள்ளியம்மாள் ஆகியோர் &nbsp;அறிக்கைகளை முன்வைத்தனர். &nbsp;தமிழ்நாடு விவசாயிகள் சங்க &nbsp;மாவட்டத் தலைவர் எம்.குமார், &nbsp;மாவட்டச் செயலாளர் சோ.அருச் சுனன், மலைவாழ் மக்கள் சங்க &nbsp;மாவட்டச் செயலாளர் கே.என். மல்லையன், கரும்பு விவசாயிகள் &nbsp;சங்க மாவட்டத் தலைவர் பி.இளம்ப ரிதி, மாவட்டச் செயலாளர் சி.வஞ்சி &nbsp;ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், தவிடு, புண் ணாக்கு, பருத்திக்கொட்டை கலப்பு &nbsp;தீவனங்கள், கால்நடைகள் விலை &nbsp;உயர்த்துள்ள நிலையில், பால் &nbsp;கொள்முதல் விலையை உயர்த்த &nbsp;வேண்டும். அதன்படி, பசும்பா லுக்கு ரூ.45 மற்றும் எருமைப்பா லுக்கு ரூ.60 என விலை அறிவிக்க &nbsp;வேண்டும். தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகையை ஒரு லிட்டருக்கு ரூ.5 &nbsp;உயர்த்தி வழங்க வேண்டும். கால் நடை தீவனங்களை 50 சதவிகித மானியத்தில் வழங்க வேண்டும். &nbsp;கால்நடைகளுக்கு தேவையான &nbsp;அனைத்து மருந்து பொருட்களை யும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க &nbsp;நடவடிக்கை எடுக்க வேண்டும். 2017 ஆம் ஆண்டு அக்.28 ஆம் &nbsp;தேதி வழங்கிய மதுரை உயர்நீதி மன்ற உத்தரவுபடி, ஆரம்ப சங்கங் களிலிருந்து பால் வண்டியில் ஏற்று வதற்கு முன்பாக பாலின் அளவை யும் குறித்து கொடுக்க வேண்டும். ஆரம்ப சங்க ஊழியர்களுக்கு சம் பள உயர்வு, பணி பாதுகாப்பு செய்ய வேண்டும். கலைஞர் பணி யாளர் காப்பீட்டு திட்டத்தை அறி வித்து இயற்கை மரணம், விபத்து &nbsp;மரணத்திற்கு இழப்பீடும், மருத்து வத்திற்கு வழிவகை செய்ய வேண் டும். குழந்தைகள் சத்துணவு திட்டத் தில் பாலையும் சேர்த்து வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும், உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் தருமபுரி மாவட்டத் தலைவராக ஆர்.சின்னசாமி, செயலாளராக கே.அன்பு, பொருளாளராக கே. என்.ஏழுமலை, துணைத்தலைவர் களாக என்.கந்தசாமி, அண்ணா துரை, கண்ணியப்பன், துணைச் செயலாளர்களாக ராமமூர்த்தி, மனோகரன், கைலாசம் உட்பட 26 &nbsp;மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத் தின் மாநிலப் பொருளாளர் ஏ.எம்.முனுசாமி நிறைவுரையாற்றினார். நிர்வாகி சி.மணி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.