கவியருவியில் தடுப்புக்கம்பிகள் அமைக்க வலியுறுத்தல்
8 Feb 2026, 3:55 pm
<p><strong>கவியருவியில் தடுப்புக்கம்பிகள் அமைக்க வலியுறுத்தல்</strong></p>
<p>பொள்ளாச்சி, பிப்.8- ஆழியார் கவியருவியில் விபத்துகளை தடுக்க, உடன டியாக தடுப்புப்கம்பிகள் அமைக்க வேண்டும் என சுற்று லாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி - வால்பாறை செல் லும் பிரதான சாலையிலுள்ள, கவியருவி மற்றும் ஆழியார் அணை பூங்கா பகுதிகளுக்கு, விடுமுறை நாட்களில் ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இந்நிலை யில், கோவையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்ப தால், இந்த அருவியில் தற்போது தண்ணீர் வரத்து குறைந்தும், சுற்றுலாப் பயணிகள் வருகையும் குறைந்துள் ளது. சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கும் பகுதி யில் விபத்துகளை தடுக்கும் விதமாக மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது சேதமடைந்துள்ளதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகை யில், ஒவ்வொரு நபருக்கும் கட்டணம் செலுத்தி தான் குளிப்பதற்கு வருகிறோம். குளிக்கும் இடத்தில் விபத் தினை தடுக்க மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. அது தற்போது சேதமடைந்துள்ள தால், அவற்றை அப்புறப்படுத்தி விட்டு இரும்பு பைப்பு களால் ஆன தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும், என்றனர்.</p>
