தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆண்டிபாளையம் படகு இல்லத்தில் குளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வலியுறுத்தல்

22 Mar 2026, 4:19 pm
ஆண்டிபாளையம் படகு இல்லத்தில் குளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வலியுறுத்தல்
<p><strong>ஆண்டிபாளையம் படகு இல்லத்தில் குளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வலியுறுத்தல்</strong></p> <p>திருப்பூர், மார்ச் 22- ஆண்டிபாளையம் படகு இல் லத்தில் குளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் மற்றும் &nbsp;சுகாதாரத்திற்கான நடவடிக்கை களை மேம்படுத்த வேண்டும் என &nbsp;கோரிக்கை எழுந்துள்ளது. பனியன் உற்பத்தி மற்றும் ஏற்று மதி நகரமான திருப்பூரில் பொழுது போக்கு அம்சங்கள் குறைவு எனும் &nbsp;நிலையில், ஆண்டிபாளையம் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லம் பொதுமக்க ளிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 2021 &nbsp;ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, சுற் றுலாத்துறை சார்பில் இந்த குளம் &nbsp;படகு இல்லமாக மாற்றப்பட்டது. மங்கலம் நல்லம்மன் தடுப்பணை யில் இருந்து தண்ணீர் வரத்து பெற்று, ஆண்டு முழுவதும் நீர் &nbsp;நிறைந்து ரம்யமாக காட்சியளிக் கும் 58 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து சுற்றுலா மேம்பாட்டு கழகத்திற்கு மாற்றப் பட்டு, ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் படகு இல்லம் அமைக்கப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு நவம் பர் மாதம் தமிழக முதல்வரால் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட இந்த படகு &nbsp;இல்லத்தில், 8 பேர் வரை பயணிக் கும் வகையில் 2 மோட்டார் படகு கள், 4 பேர் பயணிக்கும் 2 பெடல் படகுகள், 2 பேர் பயணிக்கும் 6 &nbsp;பெடல் படகுகள், 4 பேர் பயணிக் கும் 3 துடுப்பு படகுகள், மற்றும் ஜெட்ஸ்கி வகை அதிவேகப்படகு என பல்வேறு வசதிகள் செய்யப் பட்டுள்ளன. திருப்பூர் மாநகரப் பகுதிகளை &nbsp;மட்டுமின்றி, மங்கலம், பல்லடம், அவிநாசி, தெக்கலூர், சோமனூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிக ளில் இருந்தும் வருகை தருவோ ரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை படகு &nbsp;சவாரி செய்து மகிழும் வகை யில், அனைவருக்கும் லைப் ஜாக்கெட் (பாதுகாப்பு உடை) அணிய வைக்கப்பட்டு அனு மதிக்கப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக படகு சவாரியை ரசித்து வருகின்றனர். இருப்பினும், இந்த படகு இல் லத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு &nbsp;தொடர்பாக இயற்கை ஆர்வலர் கள் கவலை தெரிவித்துள்ளனர். 58 &nbsp;ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளத்தை சுற்றிலும் ஒரு சில பகுதிகளில் மட்டுமே இரும்பு கம்பிகளை கொண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏனைய பகுதிகள் திறந்தவெளியில் உள் ளது. எனவே, குளத்தின் சுற்றுச் சூழலை பாதுகாக்க குளத்தை &nbsp;சுற்றி முழுவதும் தடுப்பு சுவர் அல் லது தடுப்பு வேலி அமைக்க &nbsp;வேண்டும் என இயற்கை ஆர்வ லர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், படகு இல்லத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குளத்தின் ஒட்டு மொத்த பாதுகாப்பு மற்றும் சுகா தாரத்திற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண் டும். விரைவில் பள்ளி கல்லூரிக ளுக்கு தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை விடப்பட உள்ளது. இதையொட்டி இங்கு வரும் சுற் றுலாப் பயணிகளின் எண்ணிக்கை யும் அதிகரிக்கும். எனவே உரிய &nbsp;முறையில் கழிவறை, குடிநீர் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் இருப் பதை உறுதிப்படு வேண்டும் என வும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.