முந்தய பக்கம்

பழுதடைந்த பாலத்தை இடித்து விட்டு புதிதாகக் கட்ட வலியுறுத்தல்

4 Jan 2026, 4:05 pm
பழுதடைந்த பாலத்தை இடித்து விட்டு  புதிதாகக் கட்ட வலியுறுத்தல்
<p><strong>பழுதடைந்த பாலத்தை இடித்து விட்டு &nbsp;புதிதாகக் கட்ட வலியுறுத்தல்</strong></p> <p>பாபநாசம், ஜன.4- &nbsp;தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே, கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சியில், பட்டுக்குடியை இணைக்கும் மண்ணியாற்றுப் பாலம் பழுதடைந்து, இடியும் நிலையில் உள்ளது. &nbsp;40 ஆண்டுகளைக் கடந்த இந்த மண்ணியாற்றுப் பாலத்தின் வழியே வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப் பாலம் மட்டும் &nbsp;இடியுமானால், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படுவதுடன், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே, பாலத்தை நம்பியுள்ள பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் நலன் கருதி, மண்ணியாற்றுப் பாலத்தை இடித்து விட்டு புதிதாகக் கட்ட வேண்டும். &nbsp;இதே ஊராட்சியைச் சேர்ந்த புத்தூரை இணைக்கும் பாலமும் பழுதடைந்துள்ளதால், அதையும் இடித்து விட்டு புதிதாகக் கட்ட வேண்டும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு பாலத்தை பார்வையிட்டு, அதன் தரம் குறித்து ஆய்வு செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram