முந்தய பக்கம்

நடை மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

14 Dec 2025, 3:45 pm
நடை மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
<p><strong>நடை மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்</strong></p> <p>நாமக்கல், டிச.14- குமாரபாளையத்தில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் &nbsp;மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆனங்கூர் பிரிவு &nbsp;பகுதியில் உள்ளது. இப்பள்ளிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வரு கின்றனர். இவர்கள் காலை பள்ளிக்கு வரும் போதும், பள்ளி &nbsp;முடிந்து வீட்டிற்கு திரும்பி செல்லும் போதும், பெரும் பாலான மாணவர்கள் ஆனங்கூர் பிரிவு சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த &nbsp;இச்சாலையில், மாணவர்கள் வாகனங்களில் சிக்கி அடிக்கடி &nbsp;விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க இப் பகுதியில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். அப் போது, மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் எவ்வித பாதிப் பும் இல்லாமல் சாலையை கடக்க உதவும். எனவே, சம்பந்தப் பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என &nbsp;அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram