மலை கிராமத்திற்கு சாலை அமைக்க வலியுறுத்தல்
18 Mar 2026, 3:34 pm
<p><strong>மலை கிராமத்திற்கு சாலை அமைக்க வலியுறுத்தல்</strong></p>
<p>தருமபுரி, மார்ச் 18- கோட்டூர் மலை கிராமத்திற்கு மண் சாலை அமைக்கும் பணியை தொடர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர். தருமபுரி மாவட்டம், பென்னாக ரம் அருகே உள்ள வட்டுவனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கோட்டூர் மலைக்கிராம பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராம மக்கள் கல்வி, மருத்து வம் உள்ளிட்ட அடிப்படை தேவை களுக்காக சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவு, மலை மீதிருந்து அடர்ந்த வனப்பகுதியின் வழியாக திம்மலான் மேடு அடிவாரம் வந்த டைந்து, அங்கிருந்து பெல்ரம்பட்டி வழியாக பாலக்கோடு, தருமபுரி பகுதிக்கு சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் வழிப்பாதை யானது மண் அரிப்பு ஏற்பட்டு குண் டும், குழியுமான நிலையில் உள்ள தால், பயணிக்க முடியாத சூழல் ஏற் படுகிறது. இதனால் கோட்டூர் மலைக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி, அண்மையில் பென்னா கரம் வட்டார வளர்ச்சி அலுவலகத் தினை பொதுமக்கள் முற்றுகை யிட்டனர். அதன் விளைவாக அடி வார பகுதியான திம்மலான் மேடு முதல் கோட்டூர் மலை வரை சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிற்கு மண் சாலை அமைப்பதற்காக ரூ.4.73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணி நடைபெற்று வந் தது. ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இரண்டு கிலோ மீட்டர் தொலை விற்கு மண் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தபோது, பாலக் கோடு வனத்துறையினர் குறுக் கிட்டு, சாலை அமைப்பதற்கு முறை யாக வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் தெரிவித்து, பணியை தடுத்து நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, திம்ம லான் மேடு பகுதியிலிருந்து கோட் டூர் மலை கிராம பகுதி வரை தடை யின்றி சாலை வசதி ஏற்படுத்தித்தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர்.</p>
