முந்தய பக்கம்

கைரேகைக்கு மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்

10 Jan 2026, 2:48 pm
கைரேகைக்கு மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்
<p><strong>கைரேகைக்கு மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்</strong></p> <p>ஈரோடு, ஜன.10- பொங்கல் பரிசு தொகுப்பு பெற, கைரேகைக்கு மாற்று ஏற்பாடு செய்ய &nbsp;வேண்டுமென அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது. தைப்பொங்கலை முன்னிட்டு, தமிழ் நாடு அரசின் சார்பில் &lsquo;பொங்கல் பரிசு தொகுப்பு&rsquo; வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் ரூ.3,000 இணைத்து தரப் படுகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு &nbsp;தொகுப்பு வாங்க வரும் பெரும்பாலான &nbsp;முதியோர் கைரேகை பதிவாகாமல் கடந்த 3 நாட்களாக ரேசன் கடைக்கு வந்து நாள் முழுவதும் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் கடை ஊழி யர்களுக்கும் மன உளைச்சல் ஏற்படுகி றது. எனவே கைரேகை பதிவாகாத முதி யவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து, பொங்கல் தொகுப்பு எளிதில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என &nbsp;விவசாயத் தொழிலாளர் சங்க மொடக் குறிச்சி தாலுகா செயலாளர் த.தங்க வேல் வலியுறுத்தியுள்ளார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram